முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 74

புரொபஸர் தன் நாய் ஜூலியுடன் கடற்கரைக்கு நடை பழகச் செல்கிறார். அவர் தனக்கு நன்கு பரிச்சயமான கடைக்காரரிடம் இளநீர் வாங்கி குடித்தபடி உரையாடுகிறார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:00 AM
பகிர்:

புரொபஸர் தன் நாய் ஜூலியுடன் கடற்கரைக்கு நடை பழகச் செல்கிறார். அவர் தனக்கு நன்கு பரிச்சயமான கடைக்காரரிடம் இளநீர் வாங்கி குடித்தபடி உரையாடுகிறார். கடைக்காரர் ஆங்கிலத்தில் ஆர்வம் மிக்கவர் என்பதால் புரொபஸரிடமும் ஜூலியிடமும் கேட்டு அறிந்து கொள்கிறார். அப்போது தொலைவில் பெருந்திரளாய்க் கூடி நிற்கும் இளைஞர்களைக் கண்டு அது பற்றி விசாரிக்கிறார். கடைக்காரர் அது ஒரு போராட்டம் என்கிறார். Protest என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

புரொபஸர்: ஆனால் போராட்டம் என்பது ல்ழ்ர்ற்ங்ள்ற் -க்கு
துல்லியமான மொழியாக்கம் இல்ல, தெரியுமா?
கடைக்காரர்: ஏன் சார்?
புரொபஸர்: Protest என்ற சொல், லத்தீன் மற்றும் பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்துக்கு வந்தது. இந்த மொழிகளில் protest என்றால் அறிவிப்பது என்று அர்த்தம். அதாவது to declare. அதிலிருந்து மெல்ல மெல்ல தற்போதைய அர்த்தத்தை இந்த சொல் வந்தடைந்தது.
கடைக்காரர்:  ஆச்சரியமாக இருக்கு. அறிவிப்பதுக்கும் போராடுவதுக்கும் சம்பந்தமில்லையே?
புரொபஸர்: யார் சொன்னது? போராடும் போது நாம் ஒரு மாற்று நிலைப்பாட்டை பொதுவில் வைத்து அறிவிக்கிறோம். அது தான் opposing என்ற சொல்லுக்கும் protestக்கும் உள்ள வித்தியாசம். உங்களுக்கு ஒன்றைப் பிடிக்கவில்லை என்றால் எதிர்க்கலாம். The girls parents were opposed to her marriage with a lower caste boy. இது வெறும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த எதிர்ப்பு. ஆனால் ஒரு கொள்கையை அறிவித்து எதிர்க்கும் போது அது protest ஆகிறது.
கடைக்காரர்: ஆஹா... எவ்வளவு நுணுக்கமான வித்தியாசம்!
புரொபஸர்: ஆமா. ஆனால் பழைய பொருளில் இப்போது protest புழங்குகிறது. She protested to onions being added to his sambar.
கடைக்காரர்: ஆங்... சாம்பார் பற்றி protestஆ?
புரொபஸர்: ஆமா. ஆனா இது வேற. மறுத்தாள் என்ற அர்த்தத்தில் இங்கே protest வருகிறது. அவள் சாம்பாரில் வெங்காயம் சேர்க்கக் கூடாது என்று மறுத்தாள்.
கடைக்காரர்: ஓ... ஆனா சாம்பார்ல வெங்காயம் போடாம எப்படி சார்?
புரொபஸர்: அதை விடு. உன்னோட இளநீரில் தண்ணீர் கம்மியா இருக்குன்னு நான் சொன்னா என்ன சொல்வே?
கடைக்காரர்: சத்தியமா இல்ல சாமி.
புரொபஸர்: இப்போ பண்ணினியே இது கூட ஒரு ல்ழ்ர்ற்ங்ள்ற் தான். அதாவது உன் மேல யாராவது சந்தேகமோ குற்றச்சாட்டோ எழுப்பும் போது அதை வலுவாக அழுத்தமாக மறுப்பது. You protested to the charge that your tender coconuts carry less water. 
ஜூலி: இன்னிக்கு பேப்பர்ல இங்கிலீஷ் கிரிக்கெட் அணியின் protest பற்றி ஒரு செய்தி வந்திருக்குது.
புரொபஸர்: அவங்க எதை எதிர்க்கிறாங்க?
ஜூலி: இல்ல... இதுவும் நீங்க சொல்ற மாதிரி objection  என்கிற அர்த்தத்தில் தான். அதாவது சமீபமாக நடந்து முடிந்த T20 தொடரில் தமக்கு எதிராக தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டதுன்னு சொல்லி இங்கிலீஷ் டீம் எதிர்ப்பை பதிவு பண்ணியிருக்காங்க. The English team lodged an official protest with the ICC.

அப்போது அங்கே ஒரு போலீஸ்காரரும் கையில் போராட்ட கொடி ஏந்திய இளைஞர் ஒருவரும் பரஸ்பரம் தோள் மேல் கையிட்டு சேர்ந்து வருகிறார்கள். இருவரும் ஒரு இளநீர் வாங்கி ரெண்டு ஸ்டிரா போட்டு பகிர்ந்து குடிக்கிறார்கள்.

கடைக்காரர்: ஆஹா... இவங்க ஒற்றுமையைப் பார்த்தா எனக்கே கண்ணு பட்டுடும் போலிருக்கே!
ஜூலி இளைஞனை நோக்கி: He who sups with the devil should have a long spoon
கடைக்காரர்: ஆங்!
ஜூலி: அதாவது சாத்தானுடன் உணவருந்தும் போது நீண்ட ஸ்பூன் பயன்படுத்தவும்.
கடைக்காரர்: ஏன்?
புரொபஸர்: அது ஒரு பழமொழி தம்பி. சாஸர் என்பவர் எழுதிய Canterbury Tales என்ற புத்தகத்தில் முதலில் எடுத்தாளப்பட்டது. அதன் அர்த்தம், கெட்டவங்களோட சகவாசம் வச்சுக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும். நீளமான ஸ்பூன் இருந்தா பக்கத்தில இருக்கும் சாத்தானிடம் இருந்து விலகி இருக்கலாமே. ரொம்ப பக்கத்தில் போனா சாத்தான் புடிச்சு 
முழுங்கிடும்.
கடைக்காரர் (கண்ணடித்தபடி): ஓ நீங்க அப்டி வரீங்களா? புரிஞ்சிடுச்சு... ஹி... ஹி...
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.