முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 71

புரொபஸர், கணேஷ் மற்றும் நாய் ஜூலி ஏ.டி.எம். ஒன்றின் வெளியே காத்து நிற்கும் போது அங்கு சந்திக்கும் ஒரு முதியவருடன் உரையாடுகிறார்கள்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:49 AM
பகிர்:

புரொபஸர், கணேஷ் மற்றும் நாய் ஜூலி ஏ.டி.எம். ஒன்றின் வெளியே காத்து நிற்கும் போது அங்கு சந்திக்கும் ஒரு முதியவருடன் உரையாடுகிறார்கள். Bro என்ற சொல்லின் வரலாறு பற்றி உரையாடல் வளர்கிறது. கணேஷ் முதியவரிடம் bromance என்றால் என்னவென கேட்கிறான்.

முதியவர்: Bromance படங்களோட துவக்கப்புள்ளி ஒரு இந்திப்படம்: தில் சஹ் தா ஹெ. அமிர்கான், சயிப் அலிகான் உள்ளிட்டோர் நடித்தது. தமிழில் நீ சொன்ன மாதிரி இயக்குநர் ராஜேஷோட படங்கள். அதோட வெங்கட் பிரபுவோட "சென்னை-28' மாதிரியான படங்கள். கதையில் நாயகி இருந்தாலும் அவள் முக்கியம் அல்ல. படம் சில நண்பர்களின் நட்பு, உருக்கமான உறவு பற்றி இருக்கும். கிட்டத்தட்ட ரொமான்ஸýக்கு இணையான நட்பு. அதனால் தான் brother romance  சேர்த்து bromance என்ற புதுச் சொல்லையே உருவாக்கினார்கள். 
(அப்போது சாலையில் போகும் ஒரு அல்சேஷன் நாயை நோக்கி ஜூலி வாலாட்டுகிறது.)

புரொபஸர்: Lo and behold. 
கணேஷ்: என்ன சார் ஆச்சு?
புரொபஸர்: ஜூலி ஒரு ஆம்பளை நாயைப் பார்த்து வாலாட்டுது. இதை நான் இப்போ தான் பார்க்கிறேன். Julie in your case, wonders will never cease. 
ஜூலி: He is my buddy. அவன் பேரு கோலப்பன். I call him Ko. 
கணேஷ்: அதென்ன சார் லோ லோன்னு ஏதோ சொன்னீங்க?
புரொபஸர்: Lo and behold என்பது ஒரு பழைய பிரயோகம். ஓர் அதிசயத்தைப் பார்த்தால் அப்படிச் சொல்வார்கள்.
கணேஷ்: Wonders will. 
முதியவர்: Wonders will never cease. அதாவது இந்த உலகில் ஆச்சரியங்களுக்கு முடிவே இல்லை. ஒரு நடக்க சாத்தியமில்லாத ஒண்ணு நடக்குதுன்னா, உதாரணமாக, கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது என் பேரப் பையன் புத்தகத்தை திறந்து படிக்கிறானா, wonders will never cease. இதே மாதிரி out of the blue, bolt out of the blue என்றும் சொல்லலாம்.
கணேஷ்: Blueன்னா?
முதியவர்: நீல வானம். நீல வானில் இருந்து மின்னல் எதிர்பாராமல் வெட்டும் போது நாம் திகைப்போம் இல்லையா? அதே போல் ஓர் ஆச்சரியமான விசயம் நடக்கிறதை அப்படி சொல்வோம். அதே போலத் தான் caught unwares.
கணேஷ்: மய்ஹஜ்ஹழ்ங்ன்னா தெரியாத்தனமான்னு தானே சார் அர்த்தம்?
முதியவர்: ஆமா. தெரியாத்தனமா ஒரு பொறியில கொண்டு காலை வச்சிடறே. எப்படி இருக்கும். அப்படி சுத்தமா முன் தயாரிப்புகள் இல்லாமல் ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் போது திகைக்கிறோம் இல்லையா? அது தான் caught unawares. When Modi demonetized Indian currency on November 8, 2016 night, the whole nation was caught unawares.  
புரொபஸர்: Like a rabbit caught in the headlights
முதியவர்: ஆமா. இதுவும் ஓர் அழகான idiom. அதாவது காட்டு வழியில் வேகமாய் போற வண்டிக்கு குறுக்கே வரும் முயல், ஹெட்லைட் வெளிச்சத்தில் திகைச்சு போய் நிற்குது. அது தான் like a rabbit caught in the headlights. அந்த மாதிரி யோசிக்கவே அவகாசம் இல்லாம திகைச்சு போறது தான் இது.
ஜூலி அல்சேஷன் நாயான கோலப்பனை நோக்கி: Hi buddy, hop over.
(கோலப்பன் அங்கு வருகிறது)
கணேஷ்: சார் அதென்ன buddy?
புரொபஸர்: ஆழ்ர் மாதிரி நெருக்கமான நண்பரை குறிக்கும் ஒரு சொல்.
ஜூலி: Actually அது மட்டுமில்ல. Buddy is much more than that. இன்னொருத்தரோட பாதுகாப்புக்கும் நலனுக்கும் பொறுப்பு எடுத்துக்கிற நண்பன் தான் buddy. 
கணேஷ்: வாவ்!
ஜூலி: ஆமா. அமெரிக்க ராணுவத்தில் இரண்டு வீரர்களை ஜோடியாக சேர்ந்து பயிற்சி கொள்ளச் செய்தார்கள். ஒருத்தர் இன்னொருத்தர் நலனுக்கு பொறுப்பு. இது தான் buddy system. இதில் இருந்து தான் buddy  வந்துது. 
கோலப்பன்: இப்போ I am gonna drop a bombshell.
கணேஷ்: என்னது பாம் போடப் போகுதா? இந்த நாய் எப்படி பேசுது? எனக்குத் தலை சுத்துது.
ஜூலி: நான் தான் அவனுக்குப் பேச கத்துக் கொடுத்தேன்.
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.