முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 72

புரொபஸர், கணேஷ் மற்றும் நாய் ஜூலி ஏ.டி.எம் ஒன்றின் வெளியே காத்து நிற்கும் போது அங்கு சந்திக்கும் ஒரு முதியவருடன் உரையாடுகிறார்கள்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:52 AM
பகிர்:

புரொபஸர், கணேஷ் மற்றும் நாய் ஜூலி ஏ.டி.எம் ஒன்றின் வெளியே காத்து நிற்கும் போது அங்கு சந்திக்கும் ஒரு முதியவருடன் உரையாடுகிறார்கள். அப்போது அங்கு ஜூலியின் நண்பனான  கோலப்பன் என்ற பெயருடைய மற்றொரு பேசும் நாய் வருகிறது. அது I am gonna drop a bombshell என சொல்கிறது.

ஜூலி: ஏன் என்னாச்சு? Why did all your jaws drop?
கணேஷ்: அதென்ன jaws drop?
ஜூலி: பயங்கர அதிர்ச்சியில் வாயை பொளக்குறது.
கணேஷ்: ஜூலி பேசுறதே ஒரு ஷாக். இதில இங்கே இப்போ இன்னொரு நாய் வேறெயா?
கோலப்பன்: கிளி பேசும் போது நாய் பேசக் கூடாதா?
ஜூலி: அதானே - நாயோட மூளை தானே பெரிசு?
முதியவர்: Actually, ஒரு கிளியோட மூளை சீமை நெல்லிக்கா அளவு பெரிசு. ஒப்பிடுகையில் ஒரு குரங்கோட மூளையில் இருப்பதை விட அதிக neurons கிளி மூளையில் இருக்குது.
கணேஷ்: அதென்ன சார் neurons?
முதியவர்: நரம்பணுக்கள். நம் மூளைக்கும் 
உடலுக்குமான பரிவர்த்தனை neurons மூலமே நடக்குது. சரி கோலப்பா... அதென்ன you said you are going to drop a bombshell.
கணேஷ்: என்ன சார் திரும்பவும் வெடிகுண்டா?
முதியவர்: இது வெடிகுண்டு இல்ல. To drop a bombshell Guôp JÚ idiomatic expression. அதாவது ஓர் எதிர்பாராத செய்தியைத் தெரிவிப்பது. அது நம் சூழ்நிலையை முழுக்க மாற்றியமைக்கும் செய்தியாக இருக்கும். உதாரணமா Mahendra Singh Dhoni had recently dropped a bombshell when he announced his resignation from one day captaincy.
கோலப்பன் தொண்டையை கனைக்கிறது: க்கும்... நான் சொல்லப் போறதைக் கேட்டு இந்த கூட்டத்தில் நிற்கிறவங்க சிதறி ஓடப் போறாங்க.
புரொபஸர்: அட... அதென்ன?
கோலப்பன் சத்தமாக: பக்கத்து தெருவில உள்ள ஏடிஎம்மில் இப்போ தான் பணம் நிறைத்தார்கள். அங்க கூட்டமே இல்ல. நான் இப்போ தான் பார்த்திட்டு வரேன்.
வரிசையில் நிற்பவர்கள் உடனே திரும்பிப் பார்க்கிறார்கள்.
கூட்டத்தினர்: என்ன சார்? நீங்க தானே சொன்னீங்க? உண்மையா? 
முதியவர்: ஆமா.
உடனே மக்கள் கலைந்து பக்கத்து தெருவுக்குப் போகிறார்கள்.
கோலப்பன்: சார் இனி நீங்க போய் நிம்மதியா ஏ.டி.எம்ல பணம் எடுக்கலாம்.
புரொபஸர் மகிழ்ச்சியாய் பணம் எடுக்கச் செல்கிறார்.
முதியவர்: வாவ்... when you said that they jumped out of their skins.
கணேஷ்: ஆங்...
முதியவர்: அதிர்ச்சி செய்தி கேட்டு திகைத்து போவது தான் jumping out of their skins. (கோலப்பனை பார்த்து) சரி, நீ அவங்களை ஏமாத்தலையே?
கோலப்பன்: இல்ல சார். What I said was white lies.
கணேஷ்: வெள்ளையான பொய்யா?
கோலப்பன்: Yes. யாருக்கும் உபத்திரவம் இல்லாத, தப்பான நோக்கம் இல்லாத பொய். அந்த ஏ.டி.எம்ல பணம் இருக்கிறது உண்மை. ஆனால் இவங்க எல்லாம் அங்க போனதும் அங்கயும் கூட்டமாயிடும். ஏ.டி.எம். காலியா இருந்ததுங்கறது உண்மை தான். ஆனா இனிமே இல்ல. White lies ஹி... ஹி...
கணேஷ்: அது சரி. ஆனால் பொய்க்கு ஏன் வெள்ளை நிறம் கொடுக்கணும்?
கோலப்பன்: நீ black magic கேள்விப்பட்டதில்ல?
கணேஷ்: பில்லிசூனியம்.
கோலப்பன்: ஆமா. ஆனால் white magic என்பது நல்ல காரியத்துக்காகப் பண்ணப்படற மந்திரவாதம். பொதுவாகவே இங்கிலீசில் கறுப்பை கெட்ட காரியங்களுக்கான அறிகுறியா பார்த்தாங்க. dark cloud on the horizon கேள்விப்பட்டதில்ல?
கணேஷ்: ம்ஹும்.
ஜூலி: என் பிரண்டு தான் எவ்வளவு புத்திசாலி. நீ சொல்லுடா?
கோலப்பன்: தாங்க்யூடா ஜூல்ஸ். (கணேஷை நோக்கி) ஒரு கெட்ட சகுனம் எதிர்பட்டதுன்னா அது தான் dark cloud on the horizon. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முன்னர் வந்த இந்த ரூபாய் நோட்டு தடை was a dark cloud on the horizon for the Tamil publishers. 
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.