முகப்பு
இளைஞர்மணி

ஒருநொடியில்... உங்கள் திரையில்!

ஓவியப் பிரியர்களுக்கு கூகுள் நிறுவனம் புதிய சேவையைத்  தொடங்கியுள்ளது.  உங்களுக்கு பிடித்த  ஓவியர்களின் ஓவியங்கள் உலகத்தில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

ஓவியப் பிரியர்களுக்கு கூகுள் நிறுவனம் புதிய சேவையைத்  தொடங்கியுள்ளது.  உங்களுக்கு பிடித்த  ஓவியர்களின் ஓவியங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கூகுளில் தேடி கண்டுபிடித்து விடலாம். அது  மட்டுமல்ல,  கணினியின் முன் அமர்ந்தபடியே அதனைப் பார்த்து ரசிக்கலாம்.

ஆம், கூகுளில் பிரபல ஓவியரின் பெயரை மட்டும் பதிவுசெய்து, வரைபடத் தேடலை தட்டினால் போதும், அவரது ஓவியங்கள் உலகம் முழுவதும் எங்கெல்லாம் உள்ளன  என்றும் அந்த பகுதியின் வெளிப்புறத் தோற்றத்தையும், ஓவிய அரங்கத்தின் உள்புறத்  தோற்றத்தையும் கூகுள் காண்பித்து விடுகிறது. பின்னர் அந்த ஓவியங்களைக்  கணினியிலேயே கண்டு ரசிக்கலாம்.

அது மட்டுமின்றி, அருங்காட்சியகங்களையும் கூகுள் வரைப்படத்  தேடலில் பதிவு செய்து, வீட்டில் அமர்ந்தபடி அருங்காட்சியகங்களைச் சுற்றி பார்த்து விடலாம். தில்லி தேசிய அருங்காட்சியகம், மும்பையில் உள்ள டாக்டர் பவ் டாஜி லாட் அருங்காட்சியகங்கள் கூகுள் பட்டியலில் உள்ளன.

இந்த அருங்காட்சியகங்களை கூகுள் வரைபடத் தேடலில் பதிவிட்டு கிளிக் செய்தால் போதும், அருங்காட்சியகங்களில் நேரில் சுற்றி பார்ப்பதைப்போல் நம்மை கூகுள் அங்கே அழைத்துச்  செல்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச்  சேவையில், அருங்காட்சியகங்களில் உள்ள பாரம்பரிய வரலாற்று பொருள்களையும் அதன் குறிப்புகளையும் ஜூம் செய்து பார்த்து படித்துவிடலாம். அவ்வளவுதான் இனி எந்நேரமும் வீட்டில் இருந்தபடியே அருங்காட்சியகங்களை சுற்றி வந்துவிடலாமே...!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.