இளைஞர்மணி

மாணவர்களுக்கு ஒரு மாத கோடை சிறப்புப் பயிற்சி!

DIN

உயிரியல், இயற்பியல், வேதியியல், கணித அறிவியல் பிரிவில் எம்.எஸ்ஸி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், மூன்றாம் ஆண்டு பிஇ/ பி.டெக் படிக்கும் மாணவர்களுக்கும் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாமை பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நடத்த உள்ளது. 

இதை SC/ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். போக்குவரத்துச் செலவு, தங்குமிடம் உணவுச் செலவு தரப்படும். பயிற்சி பெறும் ஒரு மாதத்துக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படும். புத்தகங்கள் வாங்க ரூ.1500 தரப்படும்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி வரும் ஜூன் - ஜூலை மாதத்தில் நடைபெறும்.

www.iisc.ac.in என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் 15.4.17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன் லைனில் விண்ணப்பித்தவுடன் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: http://www.iisc.ac.in/wp-content/uploads/2017/03/internship-advt.-2017.pdf

தொடர்பு முகவரி: 
The Assistant Registrar (Academic), Indian Institute of Science, BANGALORE - 560 012, Tel: 080-2293 2937, E-mail: sfse@academic.admin.iisc.ernet.in
- எம்.குணசேகர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT