இளைஞர்மணி

ஆன்லைன் கல்வி வழங்கும் பிஎஸ்என்எல்!

DIN

பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் "எஜு மித்ரா' என்ற பெயரில் இயங்கும் இணைய தளம் வாயிலாக ஆன்லைன் கல்வியை வழங்கி வருகிறது. 

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத் தொடர்பு வசதியை மட்டும் வழங்குவதோடு நிறுத்திவிடாமல், குறிப்பிட்ட கட்டணத்தில் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் பணிகளையும் தொட ங்கியுள்ளது. தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும்விதமாக போட்டித் தேர்வுகள், கணிதம், அறிவியல், திறன் மேம்பாடு, மல்டிமீடியா ஆகியவை தொடர்பான பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களின் கல்வித்துறையின் பள்ளிப் படிப்பு, சிபிஎஸ்இ பள்ளிப் படிப்பு சம்பந்தமான பயிற்சிகளையும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஜு மித்ரா இணையதளத்தில் வழங்கி வருகிறது.

எஜு மித்ரா இணையதளத்தில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்து ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஐடி (உள்ளீட்டு முகவரி), பாஸ்வேர்ட் (உள் நுழைவு ரகசிய குறியீடு) ஆகியவற்றை பெற வேண்டும். அதன் பிறகு எஜு மித்ரா இணையதளத்திற்குள் சென்று தங்களுக்கு தேவையான பயிற்சியை பெறலாம்.

மேலும் தகவல்களுக்கு : http://edumitra.net/website1 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT