ஆசிரியர்களுக்கான மொபைல் ஆப்கள்!
சிரியர் பணியில் ஈடுபட்டு கல்விச் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கென பல்வேறு மொபைல் ஆப்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சிரியர் பணியில் ஈடுபட்டு கல்விச் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கென பல்வேறு மொபைல் ஆப்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கரும்பலகைகளில் எழுதி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த காலம் போய் பல்வேறு தகவல் தொழில் நுட்ப கருவிகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை மூலமும் தற்போது கல்வி போதிக்கப்படுகிறது.
அவ்வாறு மாணவர்களுக்கு கல்வி கற்க மொபைல் ஆப்கள் இருப்பது போல கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பயன்பாட்டுக்கென பல்வேறு மொபைல் ஆப்களும் பயன்பாட்டில் உள்ளன. மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க தேவையான தகவல்களைத் திரட்டுவது, விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது, தாங்கள் கற்பிக்கும் பாடம் சம்பந்தமான தங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்ள அதே பாடத்தை எடுக்கும் மற்ற ஆசிரியர்களைத் தொடர்பு கொள்வது, தங்களிடம் படிக்கும் மாணவர்களையும் அவரது பெற்றோரையும் கல்வி சம்பந்தமாக தொடர்பு கொள்வது என பல்வேறு பயன்பாடுகளுக்கான மொபைல் ஆப்கள் உள்ளன. இவற்றை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆப்களில் சில இலவசமாகவும் கிடைக்கின்றன.
ஆசிரியர்களுக்கான மொபைல் ஆப்கள் :
Kahoot, Seesaw, Google Classroom, Teach
Learn Lead, Remind, Classtree, Slack, Additio, Epic Unlimited Books for Kids
Advertisement