முகப்பு
இளைஞர்மணி

மாணவர் விடுதிகளுக்கும் ஸ்டார்ட் அப்!

வெகுதொலைவில் உள்ள கல்வி நிலையங்களில் சென்று பயில விரும்புவோருக்கு ஏற்படும் முதல் பிரச்னை பாதுகாப்பான விடுதி வசதிதான். 

இளைஞர்மணி

மாணவர் விடுதிகளுக்கும் ஸ்டார்ட் அப்!

வெகுதொலைவில் உள்ள கல்வி நிலையங்களில் சென்று பயில விரும்புவோருக்கு ஏற்படும் முதல் பிரச்னை பாதுகாப்பான விடுதி வசதிதான். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

வெகுதொலைவில் உள்ள கல்வி நிலையங்களில் சென்று பயில விரும்புவோருக்கு  ஏற்படும் முதல் பிரச்னை பாதுகாப்பான விடுதி வசதிதான். பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் முதலில் அவர்கள் எதிர்பார்ப்பது பாதுகாப்பான இடமா என்பதுதான். விடுதி கல்வி நிலையத்துக்கு அருகே உள்ளதா?  தேவையான வசதிகள் உள்ளனவா? உணவுப் பிரச்னை உண்டா என்பன போன்ற பிற வசதிகள் குறித்தும் ஆராய்வார்கள். ஆனால், இவையெல்லாம் ஒருங்கே அமைந்த ஓர் இடத்தைத் தேடி அடைவது மிக எளிதான காரியமல்ல.  

இந்திய நகரங்களில் மாணவர்களுக்கான வீடுகள் என்பது ஒழுங்கமைக்கப்படாத சந்தையாகவே இருந்து வருவதாகக் கருதப்படுகிறது. நம் நாட்டில் மாணவர்களுக்கான தனியார் விடுதிகள், வளாகத்தினுள் அமைந்த வீடுகள், கட்டண விருந்தளிக்கும் வீடுகள் என சுமார் 61 லட்சம் மாணவர்கள் தங்குவதற்கான இடங்களே உள்ளன. அதேநேரத்தில், 3.4 கோடி இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2.66 கோடி மாணவர்கள், அதாவது 76 சதவீதம் பேர் உயர்கல்விக்காக பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்வதாக ஜேஎல்எல் என்ற மனை வணிக ஆய்வு அமைப்பு தெரிவிக்கிறது. 

உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தங்களிடம் சேரும் அனைத்து வெளியூர் மாணவர்களுக்கும் விடுதி வசதி செய்துகொடுக்க முடியாத நிலை உள்ளது. உயர்கல்விக்காக இடம்பெயரும் 76 சதவீத மாணவர்களில் 18 முதல் 20 சதவீத மாணவர்களுக்கே கல்வி நிறுவனங்களில் விடுதி வசதி உள்ளது. எஞ்சிய சுமார் 56 சதவீத மாணவர்கள் பாதுகாப்பானதும், படிப்பதற்கு ஏற்றதுமான இடங்களை நகரங்களில் தேடிவரும் சூழலே உள்ளது.

இந்த நிலையில், மாணவர்களுக்குப்  பாதுகாப்பான, கட்டுப்படியான கட்டணத்தில், அடிப்படை வசதிகளில் இருந்து, ஆடம்பர வசதிகள் கொண்டது வரையிலான வீடுகளை அமைத்து தருவதற்காக அண்மைக்காலமாக சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக, Nestaway, Grabhouse, YourOwnRoom போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வீடுகளை ஏற்பாடு செய்து தருகின்றன. மேலும், மாணவர்களுக்கான வீடுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் சில நிறுவனங்களும் உள்ளன.

அவற்றில் ஒன்று Stanza Living. தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2017-இல் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். தற்போது, தில்லி, நொய்டா ஆகிய நகரங்களில் மட்டும் இயங்கிவரும் இந்த நிறுவனம், உரிமையாளர்களிடம் வீடுகளைக் குத்தகைக்குப் பெற்று, அவற்றை மாணவர்களுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்து கொடுக்கிறது. இதில், உணவு, இணையம், சலவை, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அறைகளுக்கான வாடகை மாதம் 5 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, மாணவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளுக்கு ஏற்ப அதிகரிக்கும்.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனம் Studentacco. இது தில்லி, நொய்டா, குர்கான், ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2015-இல்  தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில்  மாணவர்கள் தங்கும் அறைக்கு சராசரி மாதக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

நொய்டாவை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் டப்ஹஸ்ரீண்ர். இங்கு மாணவர்கள் தனியாகவும், பங்கீட்டு முறையிலும் தங்கலாம்.   கடந்த 2016-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவன வீடுகளில் அடிப்படை வசதிகளுடன் குறைந்த கட்டண அறைகளும், நீச்சல் குளம், மேஜை பந்து விளையாட்டு நிலையம், புத்தகப் பரிமாற்ற மையங்கள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் கொண்ட அறைகளும் உள்ளன. இவற்றுக்கான மாதக் கட்டணம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 24 ஆயிரம் வரை உள்ளது.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மற்றொரு நிறுவனம் வர்ன்ழ் நல்ஹஸ்ரீங்.   2016-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தில்லி, மும்பை, சண்டீகர், ஜலந்தர், புணே, நொய்டா, கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் 11 விடுதிகளில் 1200 அறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இது குளிரூட்டப்பட்ட அறை, இணையம், மருத்துவம், உடற்பயிற்சிக்கூடம், பாதுகாவலர் வசதிகளுடன் கூடியது. இதற்கான அறை கட்டணம் ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வசதிகளுக்கு ஏற்ப உள்ளது.

தில்லியில் இருந்து செயல்படும் மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனம் CoHo. இது பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றும் இளம் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வீடுகளை தில்லி, குருகிராம், நொய்டா ஆகிய நகரங்களில் அமைத்து கொடுக்கிறது. கடந்த 2015-இல்   தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அறை பராமரிப்பு, இணையம், டிடிஎச் கேபிள் உள்ளிட்ட பல வசதிகளைச் செய்துகொடுக்கிறது. இங்கு அறை கட்டணம் மாதம் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரம் வரை உள்ளது.

Zolo Stays-இது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம்.   2015-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பெங்களூரு, சென்னை, தில்லி, புணே, ராஜஸ்தானில் உள்ள கோடா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அறை கட்டணம் இருவர் பகிர்ந்துகொள்ளும் அடிப்படையில் நபருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரமாக உள்ளது.

பொதுவாக, கடந்த 2015-இல் சர்வதேச அளவில் இருந்த மாணவர்களுக்கான வீட்டுச் சந்தையின் மதிப்பு ரூ. 84 ஆயிரம் கோடி. இது வரும் 2025-இல் ரூ. 3.5 லட்சம் கோடியாக உயரும் என கூறப்படுகிறது. இந்தத் துறையில் புதிதாக தோன்றி வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, மாணவர்களுக்குப்  பாதுகாப்பான சூழலையும் ஏற்படுத்தியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →