இளைஞர்மணி

முயன்றால் முடியும்: உசைன்போல்ட்டிடம் வெற்றிக்கான டிப்ஸ்!

DIN

கனவுகளை நனவாக்க தொடர் முயற்சி இருந்தால் போதும், பணம் அதற்கு தடையாக இருக்காது என சாதித்து காட்டியுள்ளார் டில்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.   

டில்லி, ஆசாத்பூர், படாபாக் பகுதியைச் சேர்ந்த 18 வயதேயான இளைஞர் நிசார்அகமதுதான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர். பொதுவாக பெரிய பணக்காரர்கள்தான் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும் என்ற கருத்தை சுக்குநூறாக நொறுக்கி சாதனை புரிந்துள்ளார் இவர். நிசாரின் தந்தை அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். குறைந்த வருவாயில்தான் அந்த குடும்பம் வாழ்க்கையை ஓட்டி வருகிறது.

படாபாக் பகுதியில் ரயில் பாதை அருகே உள்ள மிக சிறிய வீட்டில்தான் நிசார்அகமது வசித்து வருகிறார். நிசார் அங்குள்ள பள்ளியொன்றில் படிக்கும் பொழுது தடகளத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பல நேரங்களில் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டு வந்திருக்கிறார்.

இதைப் பார்த்த ஆசிரியர் ஒருவர், காலில் ஷூ கூட அணியாமல் வேகமாக ஓடும் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார். பின்னர் நிசாரை அழைத்து, தேவையான உதவிகளை செய்து ஊக்கப்படுத்தியிருக்கிறார். அன்று தொடங்கிய நிசாரின் ஓட்டம், எத்தனையோ பதக்கங்களை வென்ற பின்பும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. 

ஆனாலும், அவருக்கு ஒரு கனவு... ஆம்... தடகளத்தில் பல்வேறு பதக்கங்களை வென்று குவித்திருக்கின்ற உசைன்போல்ட்டை சந்திக்க வேண்டும் என்பதுதான் அவரின் பெரிய ஆசை. அந்த ஆசையைக் கூட அவரின் உழைப்பும்,முயற்சியும் பெற்றுக் கொடுத்துவிட்டன. 

2017-ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற, தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 16 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார் நிசார். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற "கேலோ இந்தியா யூத் கேம்ஸ்( ஓட்ங்ப்ர் ஐய்க்ண்ஹ நஸ்ரீட்ர்ர்ப் எஹம்ங்ள்) தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று சாதனை படைத்தார்.  

இந்த சாதனையால், 8 முறை ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற உசைன்போல்டிடம் , நிசாரால் பயிற்சி பெற முடிந்தது.  

ஜமைக்காவில் உள்ள ரேசர்ஸ் ட்ராக் கிளப்பில் அவருக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. அவருடன் சேர்ந்து இந்தியாவைச் சேர்ந்த 12 பேரும் அந்த பயிற்சியில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை Gas Authority of India Limited மற்றும் Anglian Medal Hunt நிறுவனமும் செய்திருந்தன.

""தடகள வீரர்கள் அனைவருக்குமே இருக்கும் கனவு உசைன்போல்ட்டைச் சந்திக்க வேண்டுமென்பதுதான். அவரை நான் சந்தித்ததுடன், அவரிடம் பயிற்சியும் பெற்றது மறக்க முடியாத நிகழ்ச்சி. அவர் எனக்கு வழங்கிய வெற்றிக்கான டிப்ஸ்களை நான் எப்போதுமே மனதில் வைத்து இலக்கை நோக்கி பயணிக்கிறேன். கடினமான உழைப்புதான் சாதனையைத் தரும்'' என்று அவர் கூறிய வார்த்தைகள் எப்போதுமே எனது காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது'' என்கிறார் நிசார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT