முகப்பு
இளைஞர்மணி

கரோனாவுக்கு எதிராக... மருத்துவக் கருவிகள்... தடுப்பு மருந்துகள்!

இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் கரோனா வைரஸ் தாக்குதலால் மனிதகுலமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. வளர்ந்த நாடுகள் கூட சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. பல நாடுகள் இந்தியாவிடம் ஏற்கெனவே

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் கரோனா வைரஸ் தாக்குதலால் மனிதகுலமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. வளர்ந்த நாடுகள் கூட சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. பல நாடுகள் இந்தியாவிடம் ஏற்கெனவே உள்ள மருந்துகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. 

தற்போது நாடெங்கும், தனித்திருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள வசதியாக ரோபோக்கள், கிருமிநாசினி தெளிக்கும் வகையிலான ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உலக நாடுகள் கோவிட் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் இந்தியாவும் அது தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு  கரோனா தடுப்பு முறைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் ஆராய்ச்சி மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.  

அறிவியலில் ஆர்வமுள்ளவர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் விரும்பிகள் ஆகியோரை கரோனாவுக்கு எதிரான உபகரணங்களை உருவாக்கத் தூண்டு வகையில்  அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம்  (SCIENCE AND ENGINEERING RESEARCH BOARD - SERB) இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொண்ட நானோ பூச்சு மற்றும் நானோ அடிப்படையிலான பொருள்களை உருவாக்கும் குறுகிய கால திட்டங்களுக்கு, SERB மூலமாக அறிவியல் தொழில்நுட்பத் துறை (DEPARTMENT OF SCIENCE AND 
TECHNOLOGY } NANO MISSION (Short}term Research Grant special call for Nano Coating  COVDID-19) அழைப்பு விடுத்துள்ளது.  தனிப்பட்ட பாதுகாப்பு உடை (PPE) போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு இந்தத் திட்டத்தை அளிக்கலாம். 

 இதை தொழிற்சாலை அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அளித்து அதிக அளவில் உற்பத்தி செய்யலாம் என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில், சுகாதாரத் துறை தேவைகளைச் சமாளிக்க பெருமளவு பங்களிப்புச் செய்வதாக இந்த நானோ பூச்சுகள் அமையும். 

கோவிட்-19க்கு எதிரான மூன்றடுக்கு மருத்துவ மாஸ்க்குகள் மற்றும் ச-95 சுவாசக் கவசம் அல்லது அதைவிட சிறந்த செயல்திறன் உள்ள மாஸ்க்குகளை பெருமளவில் தயாரித்தல், முழு உடல் கவச உடைகளை பெருமளவு தயாரித்தல் மற்றும் கோவிட்-19 தாக்குதலுக்கு எதிராகப் பணியாற்றி வரும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முதலில் வரும் திட்டம் முதலில் பரிசீலிக்கப்படும் என்ற அடிப்படையில், செயலாக்கத் தன்மை, திட்டத்தின் வாய்ப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து, பிறகு நிபுணர்களால் ஆய்வு செய்யப்படும். 

இதில் உருவாக்கப்பட்டு தொழில் துறைக்கு அளிக்கப்படும் பொருட்கள் சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நானோ பூச்சு அடிப்படையிலான  பொருட்கள் தயாரிப்பில் தரத்தை உறுதி செய்வதற்கு, பொருத்தமான இந்தியத் தரநிலைகளை உருவாக்குவதில் உதவிகரமாக இருப்பவையாகவும் இருக்க வேண்டும். இதற்கான திட்டங்களை 2020 ஏப்ரல் 30 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும் கால அளவு அதிகபட்சம் 1 ஆண்டாகும். இதற்கான செலவு ரூ.25 லட்சத்தைத் தாண்டக் கூடாது. பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது அவசியம். 

இது குறித்த விவரங்களை அறிய  www.serbonline.in என்ற இணையதளத்தை பாருங்கள். 

தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க அழைப்பு:ஆன்டிவைரல், தடுப்பு மருந்துகள் மற்றும் தொற்றை எளிய முறையில் கண்டறியும் உபகரணங்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கான 3 வருட புராஜெக்ட் செய்வதற்கு தயாராகவுள்ள Academic and research institutions LÞdÏ SERBIRHPA அழைப்பு விடுத்துள்ளது. WHO/Govt. of India protocols -இன் படி தகுதி வாய்ந்த நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.

ஏப்ரல் 30 - ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தல் அவசியம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.