வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 254
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்துசமாளிக்கிறான்.
இதனிடையே மன்னர் கேள்வி கேட்கும் பொறுப்பை தனது வெண்புரவியான ஷாவிடம் ஒப்படைக்கிறார். அது ஹ்ர் எனும் அமெரிக்க வியப்பொலி தோன்றிய வரலாற்றை விளக்கும்படி கணேஷிடம் கேட்கிறது.
கணேஷ்: நான் தான் பதில் சொல்லிட்டேனே?
ஷா: ஆமா, இது உபரியான கேள்வி. பதில் தெரிஞ்சா சொல்லலாம். இல்லை என்றாலும் உனக்குப் பிரச்னை வராது.
கணேஷ் (புரொபஸரிடம்): சார், உங்களுக்குத் தெரியுமா?
புரொபஸர்: Yo என்கிற வியப்பொலிக்கு என ஒரு தெளிவான வரலாறு இல்ல. இது பதினான்காம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆரம்பித்ததுன்னு சொல்றாங்க. அதாவது ஒரு வாக்கியத்தில் அழுத்தத்தை கொடுப்பதற்காக. உதாரணமா, yo, come here. அல்லது மாலுமிகள் ஆபத்தை உணர்த்தும் பட்சத்தில் இதை அப்போது பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் சிலரோ இது உலகப்போர்களுக்குப் பிறகு அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மற்றும் இத்தாலிய அமெரிக்கர்களால் பிரசித்தமாக்கப்பட்டதுன்னு சொல்றாங்க. இத்தாலிய அமெரிக்கர்களிடம் இருந்தே வந்ததுன்னு சொல்றவங்க, அவர்களுடைய மொழியில் பரஸ்பரம் வணக்கம் சொல்வதற்கு பயன்பட்ட guahl-yo-nay எனும் சொல்லை ஆதாரமாகச் சொல்கிறார்கள். இதை இத்தாலிய மொழியில் வால்-யோ-நேய் என உச்சரிப்பார்கள். இத்தாலியர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த காலத்தில் சக இத்தாலியர்களைக் கண்டால் யோ-நேய் என சுருக்கி முகமன் தெரிவிப்பார்கள். இதுவே பின்னாளில் yo என சுருங்கி மெல்ல மெல்ல கறுப்பின மற்றும் வெள்ளையின அமெரிக்கர்களிடம் பரவியதாய் சொல்கிறார்கள். மற்றொரு தரப்பு உள்ளது - இந்த yo எனும் வியப்பொலி அமெரிக்க ராணுவக் கலாசாரத்தில் இருந்து தோன்றியது என்கிறார்கள். அதாவது இரண்டாம் உலகப்போர் மற்றும் வியட்நாம் யுத்தத்தின் போது ழ்ர்ப்ப் ஸ்ரீஹப்ப் எடுக்கிற சமயத்தில்...
கணேஷ்: ரோல் கால் என்றால்?
புரொபஸர்: attendance எடுப்பதைத் தான் அப்படி சொல்வார்கள். அப்படி ரோல்கால் எடுக்கும் போது வீரர்கள் ஒவ்வொருவராக yo என்பார்கள். இதன் பொருள் "உள்ளேன் ஐயா'. இந்த வீரர்கள் யுத்தம் முடிந்து அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பிய போது அவர்களிடம் இருந்து பிற மக்களுக்கு இந்த பயன்பாடு தொற்றிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
கணேஷ்: அப்பாடி... எவ்வளவு பெரிய வரலாறு!
புரொபஸர்: ஆமாம், தேடிப் போனால் ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி அனைத்தும் அடங்கி வரலாறு வெளிவரும். ஆனால் ஒண்ணு இந்த ஹ்ர் அதிகமும் புழக்கத்தில் இருப்பது அமெரிக்க கறுப்பின மக்களிடமும், ரொம்ப ஹிப்பியாகவோ நகர்வயப்பட்டவர்களாகவோ தங்களைக் காட்டிக் கொள்கிறவர்களிடமே.
ஷா: நன்று. மற்றொரு கேள்வி: Eggplant என்பார்களே அதை சாப்டிருக்கியா?
கணேஷ்: முட்டையில் இருந்து செடியா? குழப்பமா இருக்கு. அது முட்டை முட்டையா இருக்குமா?
ஷா: இல்ல... முட்டையோட வடிவத்தில இருக்கும். தெரியுமா?
கணேஷ்: எங்கியோ கேள்விப்பட்டிருக்கேன்...
ஜுலி (மெல்ல): கத்திரிக்காடா
கணேஷ்: oh brinjal.
ஷா: ஆமா, அதை ஏன் eggplantன்னு சொல்றாங்க?
கணேஷ்: இதென்னடா சிதம்பரத்துக்கு வந்த சோதனை? (வீரபரகேசரியைப் பார்த்து) மன்னர் மன்னா, நான் தோத்துட்டேன். நீங்க என்னைக் கழுவேற்றுங்க, தலையைத் துண்டிங்க. என்னால முடியல. டயர்ட் ஆகிட்டேன்.
வீரபரகேசரி: இல்லை, தம்பி நீ வெற்றிகரமாக இந்த போட்டிக்கான அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி முடித்து விட்டாய். இப்போது நீ பதில் கூறிக் கொண்டிருப்பது சும்மா ஒரு பொழுதுபோக்குக்காகத் தான்...
கணேஷ் (தனக்குள்): அடப்பாவி (வீரபரகேசரியிடம்) மன்னர் மன்னா, நீர் ஒரு மாமாமன்னர். உங்கள் தாள் பணிந்து வணங்குகிறேன்.
வீரபரகேசரி (சுற்றுமுற்றும் பார்க்கிறார்): யாரங்கே!
வீரர்கள் ஒரு தங்கத்தாம்பாளத்தில் பட்டயம் ஏந்தி
வருகிறார்கள். வீரபரகேசரி அதை கணேஷிடம்
கொடுக்கிறார்.
வீரபரகேசரி: இன்றிலிருந்து நீ ஆயிரம் கேள்விகளை வென்ற அபூர்வ மாமணி என அறியப்படுவாய்.
கணேஷ்: நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் மன்னா. நம் தேசத்தின் வரலாற்றிலேயே மிகவும் பொழுதுபோக்கான தலைவர் நீங்கதான். நீங்க நின்றால், அசைந்தால் கேளிக்கை.
வீரபரகேசரி: என் தேசத்தின் கீழ்மட்ட பிரஜையான உனது இந்த பாராட்டை எந்த ஆணவமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் நீ இப்போது ஷாவின் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
கணேஷ்: ஐயோ!
ஜூலி: ஆமா மன்னா, விடாதீங்க இவனை. அப்போ தான் எல்லாரும் பிஸியா இருப்போம்.
(இனியும் பேசுவோம்)