இளைஞர்மணி

கரோனா ஊரடங்கு: அதிகரிக்கும் வீடியோ விளையாட்டுகள்!

வி.குமாரமுருகன்

உலகமெங்கும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில், எல்லாவிதமான தொழில்களும், உற்பத்தித்துறைகளும் முடங்கிப் போயிருக்கும் நிலையில், வீடியோ விளையாட்டுகளின் விற்பனை மட்டும் சத்தமின்றி உயர்ந்து வருகிறது.

கரோனா பாதிப்பு பரவாத வகையில் உலகமெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்கு ஏராளமானோர் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி முடங்கி கிடப்பவர்களின் பொழுதுபோக்காக வீடியோ விளையாட்டு இருந்து வருவதால், வீடியோ விளையாட்டுகளின் விற்பனை பல மடங்கு பெருகியுள்ளது.

Nintendo's தற்போது வெளியிட்ட வீடியோ விளையாட்டு ஜப்பானில் 3 நாள்களில் 1.8 மில்லியனையும் தாண்டி விற்பனையாகியுள்ளதாக video game publication Famitsu வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

அது போல் மார்ச் 10 - ஆம் தேதி வெளியான Activision Blizzard's first}person shooter Call of Duty: Warzone - ஐ 10 நாள்களில் 30 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், அவர்களின் ஒரு பொழுதுபோக்கு வீடியோ விளையாட்டு மட்டுமே என்றாகிவிட்ட நிலையில், புதிய வீடியோ விளையாட்டுகளின் விற்பனை பல மில்லியன்களைக் கடந்து முந்தைய விற்பனை சாதனைகளை எல்லாம் முறியடித்து வருகிறது.

Nintendo's மார்ச் 20- இல் வெளியிட்ட New Horizon வீடியோ விளையாட்டு ஜப்பானில் 3 நாள்களில் 1.8 மில்லியன் விற்பனையாகியுள்ள நிலையில், யு.கே.வில் இதன் விற்பனை இதற்கு முந்தைய வீடியோ விளையாட்டுகளின் விற்பனை முதல் வாரத்தில் இருந்ததை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாக gaming publication games industry தெரிவித்துள்ளது.

வீடியோ விளையாட்டுகள் ஏதோ நாமே நேரடியாக களத்தில் இருந்து விளையாடுவது போன்ற மாயத் தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால், இது போன்ற வீடியோ விளையாட்டுகள் எல்லாருக்கும் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனால் ஆண்டுதோறும் புது புது விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது வாடிக்கை.

மேலும், இத்தகைய வீடியோ விளையாட்டுகள் விளையாடுபவர்கள் அந்த விளையாட்டுகளில் தங்களுடைய சொந்த சிந்தனைகளைப் புகுத்தி ஏதோ ஒன்றைப் புதிதாகச் செய்வது போல் நினைத்துச் செயல்பட முடியும்.

தங்கள் வீடுகளில் அமர்ந்து கொண்டே தீவுகளுக்குச் சென்று மீன் பிடிப்பது போலவும், அங்குள்ள வளங்கள் குறித்து நேரடியாகத் தெரிந்து கொண்டது போன்ற தோற்றத்தையும் இத்தகைய வீடியோ விளையாட்டுகள் அளிக்கின்றன.

மேலும், இத்தகைய விளையாட்டுகள் மாயத் தோற்றத்தைக் கூட நிஜ தோற்றமாகவே காட்டும் என்பதால் இன்றைய காலகட்டத்தில் வீடியோ விளையாட்டுகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டு வருகிறது. அதுவும், இன்றைய ஊரடங்கு காலத்தில் இதன் மேலுள்ள ஈர்ப்பு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது நிகழாண்டில் வீடியோ விளையாட்டுகளின் விற்பனை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவுள்ளது. Animal Crossing வீடியோ கேமின் விற்பனை ஆரம்ப நிலையிலேயே எதிர்பார்த்ததை விட பன்மடங்கு பெருகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வீடியோ விளையாட்டுகளின் பயன்பாட்டை விட இந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் வீடியோ விளையாட்டுகளின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 65 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வீடியோ விளையாட்டுகள் குறித்து எந்தவித விளம்பரமும் இன்றியே பல மடங்கு விற்பனை பெருகியிருக்கிறது.

வீடியோ விளையாட்டுகளில் முன்பு ஆர்வமில்லாதவர்கள் கூட தற்போதைய நிலையில் வீடியோ விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். வெளியே சென்று யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் வீட்டில் தனியாக இருக்கும் நிலையில், எந்த வழியிலாவது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் ஆன்-லைன் வீடியோ விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் ஆன்-லைன் வீடியோ விளையாட்டுகளின் பயன்பாடும் மிக பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த காலங்களில் வீடியோ விளையாட்டுகளைப் பயன்படுத்தி விட்டு பின்னர் அதை விட்டு விலகி இருந்தவர்கள் கூட மீண்டும் வீடியோ விளையாட்டுகளை விளையாடத் தொடங்கிவிட்டனர்.

நிஜ உலகம் முடங்கி இருக்கும் இந்த நிலையில் மாய உலகம் மக்களை ஒன்றிணைப்பதால் வீடியோ விளையாட்டுகள், ஆன்-லைன் விளையாட்டுகளில் மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு அதன் விளைவாக விளையாட்டுகளின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

போட்டிகளுடன் கூடிய ஆன்-லைன் விளையாட்டுகள் மூலம் சமூகத்திலுள்ளவர்களின் தொடர்பு பெருகுவதுடன், பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடிகிறது என்பதால் அத்தகைய விளையாட்டுகளின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது.

அது போல் போட்டிகளற்ற ஆன்-லைன் விளையாட்டுகளும் நட்பு வட்டாரத்தைப் பெருக்கும் என்பதால் அதன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT