முகப்பு
இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

வானமும் ஒன்றுதான்...பூமியும்  ஒன்றுதான்...பறந்திடும் பறவைக்கு. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:


முக நூலிலிருந்து....


வானமும் ஒன்றுதான்...
பூமியும்  ஒன்றுதான்...
பறந்திடும் பறவைக்கு. 

பொன். குமார்

சொல்லிக் கொண்டே
இருப்பது மட்டுமல்ல...
சொல்லாமலிருப்பதும் பதில்தான்.

உமா மோகன்

ஆயிரம் முறை  பறித்தாயிற்று, அருகம் புல்லை.
அடையாளம் காணுவதுதான் சிரமமாய் இருக்கிறது.

டிகே கலாப்ரியா

பார்க்கும்போது  மேற்பாறையிலிருந்து கீழே சரிந்திறங்கும் அருவிதான். 
நனையும்போதுதான்  உணர முடியும்... 
நெஞ்சுக்குள் நிறைந்து அதன் பின் வழிவதை.

மகுடேஸ்வரன் கோவிந்தராஜன்

சுட்டுரையிலிருந்து...

பச்சைக் கிளிக்கு கோவைப்பழம் பிடிக்கும் என...
தேடி அலைந்து வாங்கிக் கொடுப்பவர்களுக்கு...
கூண்டு பிடிக்காது என்பது ஏன் தெரியாமல் போனது?

மகிழினி

"இல்லை... இல்லை' என்று சொல்லி நிரூபித்துக் கொண்டிருப்பதை விட,
"ஆமாம்' என்று சொல்லி வாதத்தை நிறுத்திக் கொள்வது சிறந்தது.


அகரன்™

கை நழுவி உடைந்த பொருளை  நினைத்து வருந்துவதை விட...
அதைத் துடைத்து தூரப் போட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே
புத்திசாலித்தனம். 

படிக்காதவன் 

இவனுக்காகவாவது நான் "ஜெயிக்க' வேண்டும் என்று நினைக்கும்படியாவது... 
ஓர்  "எதிரி " இருந்தாலே போதும்...
வாழ்கையில்  ஜெயித்துக் காட்டலாம். 

சவேதி


வலைதளத்திலிருந்து...

முயற்சி செய்வதும்  தோற்பதும்...  ஏன் வெல்வதும் கூட,   மிகச் சாதாரணம் தான்...  அவை மற்றவர்களுக்கு  நிகழும்போது.
முயற்சி செய்வதும்   தோற்பதும்  இடியாய் இறங்கும்...  நமக்கு எனும் போது.
நீ தனித் தீவில்லை,  தோல்வியின் விளிம்பில்  திசை தடுமாறி நிற்க.  இன்று வென்றவர்  கதை அநேகம்...  அவர்கள் தழுவிய  தோல்விகள் ஏகம்.
முயல்வதும்,   வெல்லும் வரை  அயராது முயல்வதுமே  வெற்றிக்கு விலாசம்.
உன்னைத் தயார் செய்... வெல்வதற்கு.  மனதையும்  அறிவையும்  உடலையும்  ஆன்மாவையும்  தயார் செய்.
தனி ஒரு செல்லாக இருந்து, கருவறையில் வளர்ந்து,  பின் பிறந்து... ஒரே வருடத்தில்  குப்புறப் படுத்து... மண்டி போட்டு,  கை ஊன்றி, கால் பதித்து, தட்டுத் தடுமாறி நடந்து,   பின் நன்றாகவும் நடந்து,  பேசவும் கற்றுக் கொண்டு... 
உனக்கா முயற்சியில்லை?  எழு... மனந்தளராதே ...  இன்னும் கொஞ்ச தூரம் தான்,  வெற்றியை நெருங்க.  
வெற்றி உனக்கே!

http://tamizcholai.blogspot.com/

முழு கட்டுரையைப் படிக்க →