முகப்பு
இளைஞர்மணி

மனிதர்களுடன் பறக்கும் டிரோன்!

வளர்ச்சியடைந்த நவீன நகரங்களில் மெட்ரோ, மோனோ  ரயில் போக்குவரத்து போன்ற  சேவைகள் இயக்கப்படுகின்றன. எனினும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு   தீர்வு ஏற்படவில்லை. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:


வளர்ச்சியடைந்த நவீன நகரங்களில் மெட்ரோ, மோனோ  ரயில் போக்குவரத்து போன்ற  சேவைகள் இயக்கப்படுகின்றன. எனினும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு   தீர்வு ஏற்படவில்லை. 

அடுத்ததாக போக்குவரத்துக்கு காலியாக உள்ள ஒரே இடம் வான்வெளிதான். உயரப் பறக்கும் விமானங்களின் பாதையிலும் நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் காலியாக உள்ள வான்வெளிப்பகுதியை குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்த  பேட்டரி மூலம் இயங்கும்  டிரோன்களை வடிவமைப் பதில் உலகம் முழுவதும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

ஏற்கெனவே சிறிய பொருள்களை டிரோன்கள் மூலம் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக டிரோன்களில் மனிதர்களை அமர வைத்துக் கொண்டு செல்லும் புதிய "ஒலோகாப்டரை' ஜெர்
மனியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.

இருவர் மட்டுமே அமர்ந்து, தானியங்கியாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒலோகாப்டரில் 8 பேட்டரிகள் உள்ளன.
18 இறக்கைகளுடன் மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 35 கி.மீ. தூரம் வரை பறந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
துபை, சிங்கப்பூர், ஹெல்சிங்கி, ஜெர்மனியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த ஒலோகாப்டருக்கு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஒலோகாப்டரை "வான் டாக்ஸி' யாக பயன்டுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது. 
இதற்கான ஒலோகாப்டர் நிறுவனத்துடன்  ஒப்பந்தத்தையும் ஜப்பான் செய்துள்ளது. ஒலோகாப்டரை வர்த்தகப் பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கான உரிமத்தைப் பெறும் கடைசி கட்டத்தில் உள்ளதாகவும், 2-3 ஆண்டுகளில் அது முடிவடைய வாய்ப்புள்ளதாகவும் ஜெர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரீஸிலும் இதன் சோதனை நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி சோதனை வெற்றி பெற்றால் 2024-இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின்போது முக்கிய பிரமுகர்களை அழைத்துச் செல்ல இந்த ஓலோ காப்டரைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பறக்கும் கார்களாக  ஒலோகாப்டர்களை நாம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →