முகப்பு
இளைஞர்மணி

நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டி!

நியூசிலாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கரோனா  தொற்று  உறுதி செய்யப்பட்டது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:


நியூசிலாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனே அந்த நாட்டின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் கரோனா தொற்று பெரும் அளவில் குறையத்தொடங்கியது.

102 நாட்களுக்குப் பிறகு புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் நிம்மதியடைந்த அந்நாட்டு அரசு, ஊரடங்கைத் தளர்த்தியது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே தலைநகரில் மட்டும் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 15 லட்சம் மக்கள் பொதுமுடக்கத்தினால் வீட்டில் முடங்கிக் கிடந்தனர்.

இதன் பிறகு நாடு முழுக்க கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 13 நாட்களாக ஆக்லாந்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

50 லட்சம் பேரைக் கொண்ட இந்த நாட்டில் இதுவரை 1855 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 1790 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 25 பேர் கரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

""நாங்கள் கரோனா தொற்றை வென்றுவிட்டோம்'' அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

புதிய கரோனா தொற்று ஏற்படாததைத் தொடர்ந்து, நியூசிலாந்தில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வரும் 18 ஆம் தேதி ஆக்லாந்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதைவிட முக்கியமாக அக்டோபர் 17-இல் நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →