முகப்பு
இளைஞர்மணி

ரொட்டி பானம்!

உலகின் மிக முக்கியமான உணவாக ரொட்டி உள்ளது. சிறு உற்பத்தியாளர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை ரொட்டி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

உலகின் மிக முக்கியமான உணவாக ரொட்டி உள்ளது. சிறு உற்பத்தியாளர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை ரொட்டி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். கடைகளுக்கு விற்பனைக்கு வரும் ரொட்டி உடனே கெட்டுப் போவதில்லை என்றாலும், சிலநாள்களிலேயே காய்ந்து விடுகிறது. காய்ந்து போன ரொட்டியை யாரும் வாங்கமாட்டார்கள். இவ்வாறு விற்காமல் வீணாகப் போகும் ரொட்டிகள் சிங்கப்பூரில் இப்போது புது உருவம் எடுத்துள்ளன.

"நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர்'- இன் உணவுத் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விற்காமல் போன ரொட்டிகளை, சத்துள்ள அருந்தும் பானமாக மாற்றியிருக்கிறார்கள்.

எதையும் வீணாக்கக் கூடாது என்ற குறிக்கோள் உடைய அவர்கள், இதற்காகத் தேர்வு செய்தது சான்ட்விச்களுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடி ஒயிட் பிரட்டைத்தான்.

இதைத் தேர்வு செய்யவே அவர்களுக்கு சிறிது காலம் பிடித்திருக்கிறது. இந்த வெள்ளை ரொட்டியை சிறு சிறு துண்டுகளாக்கி, தண்ணீரில் கரைத்து, மாவு போலாக்கி, வேறு பல பொருள்களைச் சேர்த்து 24 மணி நேரம் நொதிக்க வைக்கின்றனர். அதற்குப் பிறகு அந்த பானத்தை அருந்தத் தருகின்றனர்.

பால் மற்றும் பால் கலந்த பொருள்களைச் சாப்பிடும் சிலருக்கு பாலில் உள்ள லாக்டோûஸ செரிக்க முடியாத ஒவ்வாத தன்மை இருக்கும். அது பல வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே மிகவும் சத்துள்ள இந்த ரொட்டி பானத்தில் பால் பொருள்கள் எதையும் அவர்கள் சேர்க்கவில்லை.

இந்த ரொட்டி பானம் சாதாரண வெப்பநிலையில் ஆறு வாரங்கள் வரை கெடாமல் இருக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பினால் ரொட்டி விற்பனை செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், இதைப் பெரிய அளவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →