வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 260
ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர்கள் ஆங்கிலம் குறித்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மயில்
களுடன் ஒரு போட்டோ ஷூட் செய்ய
வீரபரகேசரி நினைக்க, அவரது அமைச்சர் முதலில் தவறாக சினிமா பாத்திரங்களை அழைத்து வந்து, பின்னர் மயில்கள் மற்றும் ஆடுகளுடன் வந்து சேர்கிறார். அவற்றுக்குப் பின்னாலேயே மயில்களையும் ஆடுகளையும் மேய்க்
கிறவனும் வருகிறார்கள்.
அமைச்சர்: மன்னர் மன்னா...
முதலில் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். வழக்கம் போல தண்டனையாக அந்தப்புரத்தில் புல் பிடுங்குகிற வேலையைக் கொடுங்கள். சிரம் தாழ்ந்து பண்ணுகிறேன்.
வீரபரகேசரி: அந்தப்புரத்து மயில்களை சிரம் தூக்கிப் பார்த்தால் ஹ்ர்ன் ஜ்ர்ன்ப்க் ஞ்ர் ற்ர் ற்ட்ங் க்ஷப்ர்ஸ்ரீந்.
அமைச்சர்: அப்படியே ஆகட்டும் மன்னா. (தனக்குள்) பிளாக் என்றால் கட்டடங்கள் தானே. ஏதாவது கட்டடத்துக்குள் மன்னர் என்னை அனுப்புவாரா? இவ்வளவுதான் தண்டனையா? இனி குஜால்தான். (ஜாலியாகப் பாடுகிறார்) மயிலைப் புடிச்சு கூண்டிலடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்... அது எப்படி ஆடுமய்யா?
புரொபஸர் (அமைச்சரை தடுத்து நிறுத்துகிறார்): ஏன் இவ்வளவு குதூகலம் அமைச்சரே?
அமைச்சர்: முன்பெல்லாம் மன்னர் எங்களைச் சோதிப்பதற்காக அந்தப்புரத்துக்கு அனுப்புவார். அங்கே யாரால் தன் கண்ணை சதா தரையில் மட்டும் வைத்துக்கொண்டு வேலை பார்க்க முடியும். வண்ணப் பறவைகள் அங்கிங்காய்
பறந்தபடி இருக்குமே, அவர்களைப் பார்வையிட்டு மாட்டிக் கொண்டால் மன்னர் எங்கள் தலையைக் கொய்வார் அல்லது கருணை ஏற்பட்டால் ஆயிரம் சாட்டையடிகளுடன் நிறுத்திக் கொள்வார்.
எங்களை மாட்ட வைத்த பெண்டிருக்கும் பரிசில் அளிப்பார். A double whammy.
புரொபஸர்: double whammy என்றால் அதுவல்ல.
அமைச்சர்: பின்னே?
புரொபஸர்: பட்ட காலிலே படும்
என்பார்களே அதே போல இரண்டு மோசமான விசயங்கள் ஒரே சமயம் நடப்பதே double whammy - உங்களுக்கு வேலை போய் விட்ட அன்று உங்கள் மனைவி உங்களை விவாகரத்து செய்யப் போவதாய் சொன்னால்...
அமைச்சர்: ஆறுதல். இல்ல, ஜாலி.
புரொபஸர்: நீர் திருந்த மாட்டீர். சாமான்யர்கள் மனைவி தன்னை விட்டுப்போனால் மனம் உடைந்து போவார்கள். அதுவே double whammy. ஒரு கிரிக்கெட் கேப்டன் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறும் போது அவரை அணித்தலைவர் பதவியில் இருந்தும் நீக்குவதாய் அறிவிப்பு வந்தால் அது double whammy. உமக்கு நடப்பது டபுள் வேமியல்ல.
அமைச்சர்: கரெக்ட், அப்போ இது ஒரு honey trap.
புரொபஸர்: அதுவும் அல்ல. ஒருமுக்கியமான நபரை ஏமாற்றி ரகசியங்களைக் கண்டடைய அழகியரைப் பயன்படுத்துவதே honey trapping.
அமைச்சர்: ஐயய்யோ. உயிர் போனாலும் அரச ரகசியங்களை விட்டுக்
கொடுக்க மாட்டேன்.
புரொபஸர்: அது போகட்டும், ஆங்கிலமே தெரியாத உம்மை எப்படி அமைச்சராக்கினார்?
அமைச்சர்: எங்கள் சக்கரவர்த்தி திருமகனாருக்கு ஆங்கிலம் பேசுகிறவர்கள், அதிகமாய் படித்த மேதாவிகள், புத்தி
சாலிகளைப் பிடிக்காது. எளிய
மக்களைப் போல வெள்ளந்தியாக யோசிக்கிறவர்களையே அவர் அங்கீகரித்து பதவி வழங்குவார். போன மாதம் படித்தவர்களை மொத்தமாய் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டோமே.
புரொபஸர்: என்னாச்சு?
அமைச்சர்: ஒரு பொதுத்தேர்வு வைத்து யாருக்கெல்லாம் அறிவுண்டு என சோதித்தோம். வெற்றி பெற்றவர்கள் சிரச்சேதம் செய்யப்படுவார்கள் என
அறிவித்தோம். மக்கள் பயந்து போனதில் தேர்வு முடிவில் 100 % தோல்வி. படித்து சான்றிதழ் வாங்கினவர்களுக்கு எங்களை விட படுமுட்டாள்கள் என மன்னருக்கு நிம்மதியானது.
புரொபஸர்: A fool’s paradise.
அமைச்சர்: அதென்ன?
புரொபஸர்: அதுவா பொய்யான
தகவல்களைக் கொண்டு அறியாமையில் மகிழ்ச்சியாக இருப்பது.
அமைச்சர்: அப்போ கல்வி மகிழ்ச்சியைத் தராதுன்னு மன்னர் சொன்னது
சரிதானே. (புரொபஸர் தலையில் அடித்துக் கொள்கிறார்.) சரி, அதை விடுங்க, ஏன் என்னை தடுத்து நிறுத்துனீங்க?
புரொபஸர்: எச்சரிக்கலாமுன்னு தான்.
அமைச்சர்: ஏன்?
புரொபஸர்: Go to the block என்றால் ஏதோ மாடமாளிகைக்குப் போவதாக நினைத்து வைத்திருக்கிறீர்களே, உண்மையைத் தெரிந்தால் பதறிப் போவீங்க.
அமைச்சர்: ஐயோ...
புரொபஸர்: தெரிஞ்சிக்கிட்டு அப்புறமா பதறுங்க. block என்றால் பழைய காலத்தில் சிரச்சேதம் செய்வதற்காக குற்றவாளியின் தலையை வைக்கிற மரக்கட்டை. அதனால go to the block என்றால் சிரச்சேதம் செய்யப்படுவதாகப் பொருள்.
அமைச்சர் மயக்கம் போட்டு விழுகிறார்.
புரொபஸர்: ஒரு முடிவை எடுத்து அதனால் மோசமான விளைவுகளை அனுபவிப்பதைத் தான் lay your head on the block எனச் சொல்வார்கள்.
அமைச்சர் எழுந்து அதைக் கேட்டுவிட்டு மீண்டும் மயக்கமடைகிறார்.
(இனியும் பேசுவோம்)