முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 291

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது hang someone out to dry எனும் சொலவடை எப்படி தோன்றியிருக்க முடியும், உலர்த்த வெளியில் போடுவதற்கும் ஒருவரை திராட்டில் விடுவதற்கும் என்ன சம்பந்தம் என கணேஷ் கேட்க புரொபஸர் அதை விளக்குகிறார்.

புரொபஸர்: சரி... நீ துணியை துவைச்சு காயப் போட்டிருக்கியா?
கணேஷ்: ஆமா சார்...
புரொபஸர்: எங்கே போடுவே?
கணேஷ்: வெளியே. மொட்டை மாடியில், பால்கனியில், இல்லை குடியிருப்புக்குக் கீழே பார்க்கிங் லாட்டில் கொடி கட்டியிருக்கும் இடத்தில். 
புரொபஸர்: காய்ந்த பிறகு எங்கே வைப்பாய்? 
கணேஷ்: என்ன சார் நீங்க?  என்னை மாதிரி அன்றாடம் காய்ச்சியைப் பிடிச்சு வருமான வரித்துறை மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்குறீங்க. என் பாக்கெட்டுல அஞ்சு பைசா இல்ல. 

வீரபரகேசரி: நீ இதை சொன்னப் போ தான் எனக்கு நினைவு வந்தது. யோவ் உள்துறை! 

உள்துறை அமைச்சர் குனிந்த நிலையில் நடந்து வருகிறார்: மன்னர் மன்னா வீரபரகேசரி: என் தாடியை கிண்டல் பண்ணி மீம்ஸ் போட்டானே ஒருத்தன்... அவன் வீட்டுக்கு வருமான வரித்துறையை அனுப்பி ரெய்டு பண்ணினீங்களாய்யா? 

உள்துறை அமைச்சர்: அனுப்பினோம் மன்னா. ஆனா அவன் வீட்டில ஒண்ணுமே இல்ல, ஒரு உடைந்த போனை தவிர. He is as poor as Job's turkey. அதனால அவன் தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவித்ததாக வேறு வழக்கு தொடுத்து அடுத்து என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்.
வீரபரகேசரி: Apt. என் தாடியை விட இந்த நாட்டில் எதுவும் முக்கியம் இல்லை. அதையே தாக்குகிறான் என்றால் நாட்டின் பாதுகாப்பை இலக்காக்குகிறான் என்று தான் அர்த்தம். 

வெரி குட்.  

உள்துறை அமைச்சர்: மன்னர் மன்னா... அவன் ஒரு பதினைந்து வயது சிறுவன். அதனால் நான் யோசித்து ஓர் ஐடியா பண்ணி அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விட்டேன். அங்கே உங்க நாமத்தை தினமும் ஆயிரம் தடவை ஜெபிக்கும்படி தண்டனை விதித்திருக்கிறோம். 
வீரபரகேசரி: வெரி குட்.  
ஜூலி இரைத்தபடி ஓடி வருகிறது: ஹப்பா! இப்போ தான் மனசு லேசா இருக்குது. 
கணேஷ் ஜூலியிடம்: ஹை... உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன். 
ஜூலி வாலாட்டியபடி: ஐ மிஸ்ட் யூ டூ. 
புரொபஸர்: உங்க ரெண்டு பேரோட அலப்பறையும் தாங்கல. (கணேஷிடம்) நீ பதில் சொல்லு. காய்ந்த துணியை என்ன பண்ணுவே அதில விசயம் இருக்குது. 
கணேஷ்: காய்ஞ்சதுக்கு பிறகு ரூமுக்கு எடுத்து வந்து மடிச்சு அலமாரியில் வைப்பேன். 
புரொபஸர்: பத்திரப்படுத்தி வைப்பே. ஆனா அதையே காயப்போடும் போது எந்த அக்கறையும் இல்லாம கண்ட இடத்தில் வெயிலில் விட்டு வைப்பே. அப்படித்தானே? 
கணேஷ்: ஆமா சார். என் வீட்டு பக்கத்திலே ஒருத்தன் இருக்கிறான். என் அண்டர்வேரைக் கூட கொடியில் இருந்து திருடி போட்டுப்பான். அதனால நான் என் பெயரை அதில பொறிச்சு வச்சிருக்கேன். 
ஜூலி: Well, you are as much as a mean scrooge as he is.

கணேஷ்: ஸ்குரூஜ் என்றால்? 
ஜுலி: கஞ்சப் பிசுநாரி. இந்த Scrooge சார்லஸ் டிக்கென்ஸ் எனும் பிரசித்தமான நாவலாசிரியரின் A Christmas Carol  எனும் நாவலில் ஒன்றில் வரும் பயங்க கஞ்சூஸ் பாத்திரம். பின்னர் அவன் திருந்தி பணத்தை எப்படி சரிவர செலவழிக்கிறதுன்னு கத்துப்பான். இந்த பாத்திரம் பிரசித்தமாக scrooge என்றே பெயர் ஏற்பட்டு விட்டது. 
கணேஷ்: ஆனா நான் I am only frugal. அதாவது நான் கவனமாகப் பணத்தைச் செலவு செய்கிறேன். 
ஜூலி: பரவாயில்லையே. நல்லா பேச கத்துக்கிட்டியே. 

கணேஷ்: டேங்க்யூ. (புரொபஸரிடம்) சார் நீங்க சொல்லுங்க. எதுக்கு துணியை காயப் போடுறதைப் பற்றி விசாரணை நடத்தினீங்க? நடுவில நிறைய கவனச்சிதறல்கள். Distractions. 

புரொபஸர்: அதாவது நீ எப்படி துணியைக் காயப் போடும் போது அதை அக்கறையில்லாமல் வெயிலில் அதன் பாட்டுக்கு காய விடுவியோ அப்படியே ஒரு மனிதனை பிறர் சில நேரம் வேண்டுமென்றே கஷ்டப்பட விடுவது, திராட்டில் விடுவது எனும் பொருளில் தான் to hang someone out to dry எனும் சொலவடை பயன்பாட்டுக்கு வந்தது.

கணேஷ்: சார், இன்னொரு சந்தேகம்? எனக்கு விவிலியத்தில் வரும் ஜோபை தெரியும். அவர் வறுமையில் வாடுனது தெரியும். ஆனா அவருடைய வான்கோழியை இழுக்கிறாங்க?

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.