இளைஞர்மணி

நிறம் இழக்கும் பவளப்பாறைகள்!

எஸ். ராஜாராம்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள "கிரேட் பேரியர் ரீஃப்' எனப்படும் பவளப்பாறை திட்டுதான் உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை அமைந்திருக்கும் பகுதியாகும். கடல்நீர் வெப்பம் அதிகரிப்பது, கடல் மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் உலகெங்கும் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கிரேட் பேரியர் ரீஃப்பவளப்பாறையும் வேகமாக அழிவைச் சந்தித்து வருகிறது.

ஆழமற்ற கடல் பகுதியில் இந்தபவளப்பாறைகள் பல வண்ணங்களில் வளரும். பவளப்பாறைகளின் மேல்பற்றிப் படர்ந்து காணப்படும் மஞ்சள் நிற பாசிகளே பவளப்பாறைகளின் வண்ணங்களுக்கு காரணம். கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்குகின்றன. இதன் மூலம் பவளப்பாறைகளின் அழிவைத் தெரிந்து கொள்ள முடியும். பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள்உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பவளப்பாறைகளை நிறமாற்றத்திலிருந்து பாதுகாக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

"மேகத்தை உருவாக்கும் திட்டம்' என்ற இத்திட்டத்தின்படி, அதிக அளவில் நிற மாற்றத்தைச் சந்திக்கும் பவளப் பாறைகள் உள்ள பகுதிகளுக்கு மேல் வானில் ஏற்கெனவே காணப்படும் மேகக் கூட்டத்தின் மீது மெல்லிய கடல் துகள்களைத் தெளிக்கின்றனர். இதன்மூலம் மேகத்தின் திண்மம் அதிகரிக்கப்பட்டு அதற்கு கீழ்பகுதியில் உள்ள கடல்நீரின் வெப்பம் குறைந்து பவளப்பாறைகள் பாதுகாக்கப்படும்.

ஒளி மற்றும் வெப்பமான நீர்தான்பவளப்பாறை வெளுப்புக்கு முக்கிய காரணம். கோடைக் காலத்தில் பவளப்பாறையின் மேற்பகுதியில் ஒளியை 6சதவீதம் குறைத்தால், வெளுப்புத் தன்மை 50 முதல் 60 சதவீதம் குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சிறந்த கடல் பொக்கிஷமான பவளப் பாறைகளைப் பாதுகாப்பது கடல்சூழலைப் பாதுகாப்பதாகும். அதன் மூலம் எண்ணிலடங்கா கடலுயிர்களையும் பாதுகாப்பதாகும். அவற்றின்வாழ்வுக்கும் வழிவகுப்பதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT