இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

வரம்பு: 04.03.2022 தேதியின்படி 18  வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பரிதி இரா. வெங்கடேசன்

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் வேலை

பணி:  கான்ஸ்டபிள்/ ஃபயர் (ஆண்கள்)

காலியிடங்கள்: 1,149 

சம்பளம்: மாதம் ரூ. 21,700 - ரூ.69,100

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 04.03.2022 தேதியின்படி 18  வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, திறனறி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.cisfrectt.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் இஎஸ்எம் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள: https://www.cisfrectt.in/notifications/Fire21_Notification_English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.03.2022  

வன ஆராய்ச்சி மையத்தில் வேலை


பணி: டெக்னிக்கல் அசிஸ்ட்டன்ட் -09 

தகுதி: தாவரவியல், விலங்கியல், பயோடெக்னாலஜி, வனவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: ஸ்டெனோகிராபர்  - 02
பணி: லோயர் டிவிஷன் கிளார்க்  - 09

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன்  - 03

தகுதி: ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: ஃபாரஸ்ட் கார்ட் -03

தகுதி: 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மல்ட்டி டாஸ்க்கிங் ஸ்டாப்  - 16

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 21வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,300. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tfri.icfre.org  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://tfri.icfre.gov.in/recruitment-file/recruitment2.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.03.2022


ரிசர்வ் வங்கியில் வேலை

பணி: அசிஸ்ட்டன்ட் 

காலியிடங்கள்: 950

சம்பளம்: மாதம் ரூ. 20,700 - ரூ.55,700

வயது வரம்பு: 01.02.2022 தேதியின்படி, 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆர்பிஐ -ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

தமிழ்நாட்டில் முதல்நிலை எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.  

மேலும் விவரங்கள் அறிய: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/2021D78B63109D4E4FF7A2BF6B7F7EBC9174.PDF என்ற  லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.03.2022


நிலக்கரி நிறுவனத்தில் வேலை 

மொத்த காலியிடங்கள்: 313 

பணி: மைனிங் சர்டார் 

சம்பளம்: மாதம் ரூ.31,852 

தகுதி : பிளஸ் 1, டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 20.2.2022 அன்று 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000  விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : www.easterncoal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்கள் அறிய: http://www.easterncoal.gov.in/notices/recruitment/20220219_notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.03.2022 


இந்திய அஞ்சல் துறையில் வேலை


பணி: ஸ்டாப் கார் டிரைவர் (ஆர்டினரி கிரேடு)
காலியிடங்கள்: 17

1.மெயில் மோட்டார் சர்வீஸ் 
கோயம்புத்தூர்  - 11
2. ஈரோடு டிவிஷன்  - 02
3. நீலகிரி டிவிஷன்   - 01
4.  சேலம் வெஸ்ட் டிவிஷன்  - 02
5. திருப்பூர் டிவிஷன்  - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.62,000
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.     

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Manager Mail Motor Service, Goods Shed Road, Coimbatore-641001.

மேலும் விவரங்கள் அறிய: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT