மகளிர்மணி

விதவைகள் குக்கிராமம்!

தெலங்கானாவின் மெகபூப் நகர் ஜில்லாவில் பெட்ட குண்டா தண்டா என ஒரு குக்கிராமம் உள்ளது. பச்சைப் பசேல் இயற்கை கொஞ்சும் பூமி இது.

ஸ்ரீலட்சுமி

தெலங்கானாவின் மெகபூப் நகர் ஜில்லாவில் பெட்ட குண்டா தண்டா என ஒரு குக்கிராமம் உள்ளது. பச்சைப் பசேல் இயற்கை கொஞ்சும் பூமி இது. இது முக்கிய சாலையின் சரிவு பகுதிகளில், லம்பாடி இனத்தினர் நீண்ட நெடுங்காலமாக வசிக்கின்றனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர அரசு, இவர்களுக்கு நிலங்களை ஒதுக்கித் தந்தது. இவர்கள் அந்த நிலங்களை விற்று, வீடு கட்டிக்கொண்டனர்.

 முதலில் சாதாரண சாலையாக இருந்த போது இவர்கள் பகுதி கல்லும், முள்ளும்,பள்ளமுமாக வேகமாய் செல்ல முடியாதபடி இருந்தது.

 2010-இல் இந்தப்பாதை ஹைதராபாத், பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ் ஹைவே ( சஏ44)பாதையாக மாற்றப்பட்டது. அதற்கு ஏற்ப சாலைகள் விஸ்தரிக்கப்பட்டன.  சாலைகள் போடப்பட்டு திறக்கப்பட்டதும் கார்கள் நிற்காமல் சர்... சர்... என செல்ல ஆரம்பித்தன. விளைவு... இந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

 இந்த லாம்பாடி இனத்தினரில் ஆண்கள் அக்கம் பக்கம் கிராமங்களில் சென்று பல வேலைகளை செய்து வந்தனர். இவர்களில் ஆண்களுக்கு, காலம் காலமாய் குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் வேலை முடிந்து குடித்துவிட்டு, தறுமாறாக நடந்து வரும்போது, இவர்களை இடித்துத் தள்ளிவிட்டு வாகனங்கள் நிற்காமல் சென்றுவிடுமாம்.

 இவர்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர் இறந்த தகவலே பல மணி நேரத்திற்குப் பின்தான் தெரிய வருமாம்.

இந்தக் குக்கிராமத்தில் 42 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு நபராவது இப்படி  இறந்துள்ளார். இதனால் இந்தக் குக்கிராமத்தையே விதவைகள் குக்கிராமம் என அழைக்கின்றனர்.

 அருகில் 5 கிலோ மீட்டரில் நந்திகாம் என்ற நகர் உள்ளது. இதற்கு ஹைவே சாலையை ஒட்டி சர்வீஸ் ரோடு வேண்டும் எனக் கேட்டு இந்த கிராம மக்கள் அலுத்துவிட்டனர். டாய்லெட் வசதிகள் கிடையாது. நல்ல குடிதண்ணீர் வசதி கிடையாது. போர் தண்ணீர்தான். அதுவும் கலங்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT