சமையல் டிப்ஸ்
புழுங்கல் அரிசி 125 கிராம், பச்சரிசி 125 கிராம், துவரம் பருப்பு 2 தேக் கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இவற்றைக் கலந்து முதல் நாள் மாலை ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்!.
மகளிர்மணிசமையல் டிப்ஸ்

முதல் நாள் மிகுந்து போன சப்பாத்திகளை ஒரு டப்பாவில் போட்டு, மூடி, குக்கருக்குள் வைத்து, வெயிட் போடாமல் இரண்டு நிமிடம் வேக வைத்தால் சப்பாத்தி புதிதாகச் செய்ததுபோல் இருக்கும்!
சர்க்கரைப் பொங்கலை இறக்கியதும், ஒரு தேங்காய் மூடியைத் துருவி, அதில் பால் பிழிந்து இறக்கிய பொங்கலில் விட்டுக் கலந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
நல்லெண்ணெய்யில் பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய்ப் பொங்காமல் இருக்க, எண்ணெய் காய்ந்ததும் அதில் வாழைப் பழத்தோலைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்க வேண்டும். அதன் பிறகு எண்ணெய் பொங்காது.
சாம்பாரைத் தாளிக்கும் போது கொஞ்சம் வெந்தயத்தையும் சேர்த்துக் கொண்டால் சாம்பார் மணக்கும்.
பச்சை வெங்காயத்தைத் தயிரில் ஊற வைத்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும். வயிற்று உபாதைகளும் நீங்கும்.
மைதா மாவை நீர்விட்டுப் பிசையாது, அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்து, தேவைக்கு ஏற்ப உப்பு, நெய்விட்டுக் கலந்து முறுக்கு பிழியலாம். சூப்பர் டேஸ்ட்டுடன் மொறு மொறுப்பாகவும் முறுக்கு இருக்கும்.
நாக்கில் ருசி தெரியாவிட்டால் நார்த்தங்காயை மென்று துப்பிவிட்டு பிறகு சாப்பிட்டால் ருசி தெரியும்.
பால், உணவுப் பொருட்கள் பாத்திரத்தில் அடிப் பிடித்துவிட்டால் அதே பாத்திரத்தில் வெங்காயத்தைச் சிறிது போட்டு, நீர் ஊற்றி வேக வைத்தால் கறை போய்விடும்.
இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்தில் கால் பகுதிக்குச் வெள்ளைச் சாதம் சேர்த்து அரைக்கவும். இதனால் இட்லியின் சுவை கூடும். மிருதுவாகவும் இருக்கும்.
இஞ்சி, பச்சைமிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் இவற்றை மிக்ஸியில் அரைத்து ரவா தோசை மாவில் கலந்து, கடுகு, உளுந்து தாளித்து போட்டு தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும். தொட்டுக் கொள்ள எதுவுமே தேவைப்படாது.
நாலு ஆழாக்கு புழுங்கல் அரிசி, இரண்டு ஸ்பூன் வெந்தயம் ஊறப் போட்டு, மறுநாள் அரைத்து, அதனுடன், தேங்காய்த் துருவல், உப்பு, பெருங்காயத்தை அரைத்து மாவுடன் கலக்கவும். தோசைக் கல்லில் ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு மூடி விடவும். இதைத் திருப்பிப் போட வேண்டாம். எண்ணெய்யும் அதிகம் செலவாகாது. இதுதான் ஆப்பதோசை.
மோரில் இஞ்சியும் பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்த்து. அதில் சப்பாத்தி மாவைப் பிசைந்தால் வித்தியாசமான சுவையில் சப்பாத்தி இருக்கும். இது அஜீரணத்திற்கும் நல்லது.