முகப்பு
மகளிர்மணி

ஆடைத் தொழிலில் அழகாய் சம்பாதிக்கலாம்!

"எனக்குப் பூர்வீகம் திருப்பூர். என் உறவினர்கள் பலரும் ஆய்த்த ஆடை தொழிற்சாலைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.

மகளிர்மணி

ஆடைத் தொழிலில் அழகாய் சம்பாதிக்கலாம்!

"எனக்குப் பூர்வீகம் திருப்பூர். என் உறவினர்கள் பலரும் ஆய்த்த ஆடை தொழிற்சாலைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

"எனக்குப் பூர்வீகம் திருப்பூர். என் உறவினர்கள் பலரும் ஆய்த்த ஆடை தொழிற்சாலைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் நான் கல்லூரியில் படிக்கும் போதே விதவிதமான  புதுப்புது ஆடைகள் அணிந்து செல்வேன். இதைக் கண்ட என் தோழிகள் சிலர் நான் அணிந்து வரும் ஆடையின் பின்னணியை விசாரித்தனர். எங்களுக்குச் சொந்தமாக ஆடை தொழிற்சாலை இருப்பதை அறிந்த அவர்கள்,  விலைக்கு ஆடைகள் கொண்டு வரும்படி கேட்டனர். நான் நேரடி விற்பனை செய்ததால் குறைந்த விலையே வைத்து விற்றேன். இதை  அறிந்து கல்லூரி மாணவிகள் பெரும்பாலானோர் என்னிடம் ஆடையை வாங்கத் தொடங்கினர். அப்போதே எனக்கு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிட்டது'' என்கிறார் சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சிறுதொழிலதிபரான அமுதா. மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"ஓரிடத்தில் நாம் வேலைக்குச் சென்றால், அடிக்கடி பர்மிஷன் கேட்பது, லீவு கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதில் எனக்கு  அவ்வளவாக நாட்டமில்லை. எப்போதும்  ஓர் பிரஷ்ஷர் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று  நினைப்பவள் நான்.

திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு வந்துவிட்டேன். என் கணவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.  ஆரம்பத்தில் குழந்தைகள், குடும்பம் என்று இருந்தால் சொந்த தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. பிள்ளைகள் பள்ளி செல்லத் தொடங்கியதும் நிறைய ஓய்வு நேரம் கிடைக்க ஆரம்பித்தது.

பொழுதை வீணாகக் கழிக்க எனக்கு மனமில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக  லெகிங்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் என் அடுக்ககத்திலேயே சிறியதாக 2 நாள் ஸ்டால் வைத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. இதைக் கண்ட என் கணவரும் ""உன்னால் முடிந்த அளவு செய்து கொள்'' என்றார்.  குறைந்த விலையில் நல்ல தரமான லெகிங்ஸ் வாங்கிய பலருக்கும் அது பிடித்திருந்ததால், நிறையப் பேர் என்னிடம் லெகிங்ஸ்  வாங்க ஆரம்பித்தனர். இதனுடன் சேர்த்து குழந்தைகள் ஆடைகள், இரவு ஆடைகள் ஆண்கள் அணிந்து கொள்ளும்  டி- ஷர்ட் போன்றவற்றையும் தயார் செய்து விற்பனை செய்கிறேன்.

தற்போது வாட்ஸ் - ஆப், பேஸ் புக் போன்ற நிறைய தொழில்நுட்ப சாதனங்களும் வந்துவிட்டதால். வியாபாரத்திற்கு நல்ல  வரவேற்பு கிடைக்கிறது.  ஆடையை மட்டும் வாங்கி விற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் குறைந்தவிலையில் கொடுப்பதுடன்,லெகிங்ஸ் தயாரிப்பு முறையையும் கற்றுத் தருகிறேன்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →