முகப்பு
மகளிர்மணி

பெண்களின் அடையாளம் மலாலா!

மலாலா யூசுப் உலகப் பெண்களின் அடையாளம். பெண் கல்வியின் அவசியத்தை உலகிற்குப் பறை சாற்றுபவர். துப்பாக்கி குண்டுகளைக் கூட துச்சமாக மதித்துக் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர். இளம் வயதிலேயே நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் பெண்மணி. இப்போது இவருக்கு வயது 18தான்.

Updated On : 5 ஏப்ரல், 2016 at 3:26 PM
பகிர்:

மலாலா யூசுப் உலகப் பெண்களின் அடையாளம். பெண் கல்வியின் அவசியத்தை உலகிற்குப் பறை சாற்றுபவர். துப்பாக்கி குண்டுகளைக் கூட துச்சமாக மதித்துக் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர். இளம் வயதிலேயே நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் பெண்மணி. இப்போது இவருக்கு வயது 18தான்.

 இவருக்கு அடல், குஷல் என்னும் இரண்டு தம்பிகள் உள்ளனர். இவர் லண்டனில் படித்துக் கொண்டு அங்கேயே குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவரது உணவு, உடை, பொழுதுபோக்கு, கலாசாரம் போன்றவைகளில் நிறையவே இந்திய மணம் உண்டு.

Sகேமரா முன்னால் இயங்குவது இவருக்கு விருப்பம் இல்லாத விஷயமாகும். இவர் ஐ.நா.சபையில் சொற்பொழிவாற்றுவதற்காக தம் தூக்கத்தையும் உணவையும் மறந்து குறிப்பெடுத்தவர்.

Advertisement

Sஇவர் நோபல் பரிசு பெற்றபோது இவரின் சகோதரர்கள் தங்களுக்கே பரிசு கிடைத்ததைப் போன்று பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இவரின் சகோதரர்கள் இவரைவிட இளையவர்கள் என்றாலும் இவர் அவர்களைவிட பெரியவர் போன்று நடந்து கொள்வதில்லை.

Sதோழிகளோடு சினிமா பார்ப்பது இவரின் பொழுது போக்காகும். "பஜ்ரங்கி பாய்ஜான்'  இந்தி சினிமாவை அண்மையில் விரும்பிப் பார்த்தார். படம் முடிந்ததும் தொடர்ந்து கைதட்டினார். அந்த அளவுக்கு அந்தப்படம் இவரை ரசிக்க வைத்தது.

Sஇந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை இவர் பாகிஸ்தானில் சொந்த ஊரான சவாட்டில் வசித்தபோது பார்த்திருக்கிறார். ஆனால் லண்டன் வந்த பின்னால் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்த்திட நேரம் கிடைக்கவில்லையாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பார். லண்டனில் நடக்கும் மேடை நாடகங்களையும் இவர் ரசித்துப் பார்ப்பதுண்டு.

Sசில விழாக்களில் இந்திய கலாசார உடைகளை விரும்பி அணிகிறார். பல வண்ணங்கள் கலந்திருக்கும் சால்வையைத் தலைக்கு மேல் சுற்றித் கொள்வது இவருக்குப் பிடிக்கும். இவரின் சொந்த ஊரான சவாட்டில் இவரின் தோழிகள் கூட அப்படித்தான் போட்டுக் கொள்வார்கள். இவருக்குப் "பிங்க்' நிறம்தான் பிடிக்கும். ஆனால் இவரின் பெற்றோர் சிவப்பு நிறம்தான் இவருக்கு அழகாக இருக்கிறது'' என்கிறார்கள். அதனால் இவர் அந்த வண்ணத்திலேயே ஆடைகளையே அணிகிறார்.

S"பிங்க்' நிறத்தில் இவர் கட்டிக் கொண்டுவரும் "வாட்ச்' மட்டுமே இவர் விரும்பி அணியும் ஆபரணம் ஆகும். நாவல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர் வாசிப்பார். "ஹாலெட் ஹாஸ்செய்னி' எழுதிய "தவ்சண்ட் ஸ்பென்டிட் சன்ஸ்'' இவருக்குப் பிடித்த நாவலாகும்.

Sஇந்திய மற்றும் பாகிஸ்தானிய நறுமணமும், சுவையும் பொருந்திய உணவுகளை விரும்பி உண்கிறார். சாதம் இவருக்கு அதிகம் பிடிக்கும் என்றாலும் தற்போது அதை அதிகம் சாப்பிடுவதில்லை. இவரது உணவுப் பட்டியலில் பெரும்பாலும் இருப்பது பாகிஸ்தான் பிரியாணியும், இந்திய பாரம்பரிய சுவையுள்ள "கறியும்தான்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.