முகப்பு
மகளிர்மணி

சாதனை சிறுமி 2

கவிப்பிரியா, 8- ஆம் வகுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூர் மகரிஷி பன்னாட்டு  உறைவிடப் பள்ளியில், படித்து வரும் மாணவி.

Updated On : 26 ஏப்ரல், 2016 at 2:41 PM
பகிர்:

கவிப்பிரியா, 8- ஆம் வகுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூர் மகரிஷி பன்னாட்டு  உறைவிடப் பள்ளியில், படித்து வரும் மாணவி.

 செங்கல்பட்டு திருக்குறள் எல்லப்பன் மூலம்தான் திருக்குறள் பயிற்சி வகுப்பு படிக்க ஆரம்பித்தார். பயிற்சி ஆரம்பித்த 8 மாதத்திலே 1330 குறள்களையும் கற்றார். காஞ்சிபுரத்தில் செங்கல்பட்டு ஆசிரியர் ரூபி ரெஜினா, மூலம் ரூ.10,000 ரொக்கம் அளித்து பாராட்டு  பெற்றார். தொடர்ந்து தமிழக அரசின் ரூ.10,000க்கான பரிசினையும் இவர் பெற்றார்.

 திருக்குறளை ஒப்புவிக்கும் வழிமுறைகளான 1 முதல் 1330 வரை வரிசையாக சொல்லுதல், எண் வரிசை சொன்னால் குறள் சொல்லுதல், குறள் சொன்னால் எண் வரிசை சொல்லுதல், உடல் உறுப்புகள் வரும் குறள் சொல்லுதல், பூக்கள் பற்றிய குறள், பறவைகள் பற்றிய குறள், எண்கள் பற்றிய குறள், உதடு ஒட்டாத குறள், உதடு ஒட்டும் குறள் போன்றவற்றை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறார்.

Advertisement

 தனது சொந்த குரலில் 1330 குறள்களையும் பதிவு செய்து, குறுந்தகடு ஒன்று (இஈ)  வெளியிட்டுள்ளார்.

முக்கிய பிரமுகர்களுக்கான குடியரசுத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட 153 மாணவ, மாணவிகளில் கவிப்பிரியாவும் ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.