சீனரால் தமிழில் எழுதி தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் நூல்!
தமிழ்நாட்டில் உள்ள பதிப்பகங்கள் சீனமொழியிலிருந்து தமிழ்ப்படுத்தி நூல்களை வெளியிட்டுள்ளன. அவை பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து மொழி
தமிழ்நாட்டில் உள்ள பதிப்பகங்கள் சீனமொழியிலிருந்து தமிழ்ப்படுத்தி நூல்களை வெளியிட்டுள்ளன. அவை பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல்களே. அதை முறியடிக்கும் விதமாக 2013 - ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்தான் " சீனாவில் இன்ப உலா'.
தற்போது சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் தலைவராக இருக்கும் கலைமகள் எழுதி சென்னை கௌதம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல்தான் ஒரு சீனரால் தமிழில் எழுதி தமிழ்நாட்டிலேயே வெளியிடப்பட்ட முதல் நூலாகும்.
சீனாவில் காண வேண்டிய முக்கிய இடங்களை விரிவாக இந்த நூலில் கலைமகள் சுவாரசியமாக எழுதியுள்ளார். சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் 1999 முதல் பணியாற்றி வரும் இவர் தமிழ்மொழியை முறையாகக் கற்றவர்.
தற்போது இவர் சீன - தமிழ் மொழி அகராதியின் விரிவான தொகுப்பினையும் கொண்டு வந்துள்ளார். இதுதவிர, மேலும் இரு நூல்கள் விரைவில் தமிழில் வெளிவர இருக்கிறதாம்.
ஆதாரம்: சீனத் தமிழொலி பொன் விழா சிறப்பிதழ்.