வீட்டு வைத்தியம்!
மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து, 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, இரத்த சோகை நீங்கும்.
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:37 PM
- மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து, 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, இரத்த சோகை நீங்கும்.
- கண்களில் எந்த நோய் தென்பட்டாலும், அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
- வாழைத் தண்டு சாறை, மண் சட்டியில் விட்டு சிறிது சுட வைத்து, அந்தச் சாறை 2-3 நாட்கள் தொடர்ந்து பருகி வர, நீர்க்கடுப்பு குணமாகும்.
- வசம்பை இடித்துத் தூளாக்கி, இரண்டு கிராம் அளவு எடுத்து, வாயில் போட்டு சுவைத்து, வெந்நீர் குடித்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.