வளர் இளம் பெண்களுக்கு மாதவிலக்கு: சில யோசனைகள்!
சமீபகாலமாக 15-16 வயதில் இருக்கும் குழந்தைகள் அனிமிக்காக இருப்பதால் சீரான மாதவிலக்கு வருவதில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுகிறது. இப்படி ஒழுங்கற்ற மாதவிலக்கிற்கு காரணம், இரத்தசோகையே ஏற்படுகிறது.
சென்ற வாரத் தொடர்ச்சி...
மாதவிலக்கு குறித்து மருத்துவர் பார்கவி மணிவண்ணன் கூறுகிறார்:
""சமீபகாலமாக 15-16 வயதில் இருக்கும் குழந்தைகள் அனிமிக்காக இருப்பதால் சீரான மாதவிலக்கு வருவதில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுகிறது. இப்படி ஒழுங்கற்ற மாதவிலக்கிற்கு காரணம், இரத்தசோகையே ஏற்படுகிறது. இதற்கு, உணவில் இரும்பு சத்துள்ள உணவு பொருள்களான பேரீச்சை, வெண்ணெய், கீரை வகைகள், பால், மூட்டை, பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் மாதவிலக்கு பிரச்னையும் சீராகி உடலும் உறுதியாக இருக்கும்.
சில குழந்தைகளுக்கு மாதவிலக்கின் போது கடுமையான வயிற்றுவலி இருக்கும், சிலருக்கு சரியான செரிமானம் ஆகாது, சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படும். இவற்றிற்கு எல்லாம் காரணம், கருப்பையில் பந்து போன்ற ஓர் உறுப்பு இருக்கும் அதன்மீது எண்டோமென்டரி என்ற லேயர் படிந்திருக்கும். கருமுட்டை சரியாக வளர்ச்சியடையாத போது அந்த எண்டோமென்டரி என்ற லேயர் கருமுட்டையுடன் சேர்ந்து பிய்ந்து வரும் இதுதான் கடுமையான வயிற்றுவலி ஏற்பட காரணம். வயிற்று வலிக்கு இன்னொரு காரணம் பரம்பரையாகவும் வரலாம். அதுபோன்று கருப்பையில் இருந்து ஒரு நரம்பு கால் வழியாக செல்வதால், அந்த சமயங்களில் சிலருக்கு கடுமையான கால் கடுப்பது போன்ற வலி ஏற்படுகிறது.
சிலர் வயிற்றுவலியை குறைக்கக் கண்ட மாத்திரைகளை உபயோகப்படுத்துகிறார்கள். அது மிகவும் தவறான முறை. முடிந்தவரை வலியை தாங்கிக் கொள்வது
நல்லது. அல்லது வெந்தயம் ஊர வைத்த தண்ணீரையோ அல்லது சிறிது வெந்தயத்தையோ வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் குடிக்கலாம். இதனால் வயிற்றுவலி குறையும். அப்படியும் குறையாமல் கடுமையான வலி இருந்தால். ‘ம்ங்ள்ற்ஹ்ப்ள்ல்ஹள்’ என்கிற மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக காலை - இரவு என 2 முறைதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
14-18 வயதில் இருக்கும் பெண்களைப் பெரிதும் பாதிப்பது ஹார்மோன் பற்றாக்குறை. இதற்கு காரணம், தைராய்டு பிரச்னை. இரண்டு, மூன்று மாதங்கள் தொடர்ந்து மாதவிலக்கு வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ள வேண்டும். சிறுவயது பிள்ளைகளுக்கு தைராய்டு பிரச்னை இருக்குமா என்று நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது. குறைந்த காலத்தில் அதிக உடல் எடை கூடினாலோ அல்லது கழுத்துப் பகுதியில் வீக்கமாக உணர்ந்தாலோ உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ள வேண்டும். தைராய்டு சுரப்பியில் இருக்கும் பாலிகுலாஸ் ஸ்டிமுலேஷன் (டர்ப்ஹ்ஸ்ரீன்ப்ஹள் நற்ண்ம்ன்ப்ஹற்ண்ர்ய்) அதிகமானால் அதிக நாள்கள் மாதவிலக்கு இருக்கும். அதுவே குறைந்தால் அதிக நாள்கள் வராது.
17 வயதிற்கு மேல் உள்ள 70% பெண்களை பொதுவாக பாதிப்பது. ல்ஸ்ரீர்க் (டர்ப்ஹ் ஸ்ரீஹ்ள்ற்ண்ஸ்ரீ ஞஸ்ஹழ்ஹ் ஈண்ள்ங்ஹள்ங்ள்). இதற்கு காரணம், கருப்பையின் மேல் இருக்கும் ஓவரியிலிருந்துதான் கருமுட்டை வெளியே வருகிறது. சில
சமயம் இந்த கருமுட்டை அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் மாதவிலக்கில் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் உண்பது, இரத்தசோகையாக இருப்பது. இவற்றை மாற்றி சத்துள்ள உணவுகளை உண்ண ஆரம்பித்தாலே இந்த பிரச்னை படிப்படியாக குறைந்துவிடும்'' என்றார்.
பெண்கள் மாதவிலக்கின்போது கையாள வேண்டிய வழிமுறைகள்:
< மாதவிலக்கு சமயங்களில் இரண்டு - மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயமாக நாப்கின்களை மாற்ற வேண்டும். அப்படி ஒவ்வொரு முறை மாற்றும்போதும் நீரில் டெட்டால் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
< மாதவிலக்கு சமயங்களில் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். (அரிப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவது போன்றவை தொற்றுக்கான அறிகுறிகள் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது).
< மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், கட்டாயமாக அந்த நாட்களில், அந்த இடங்களில் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதனால் தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
< 10 நாள்களுக்கு மேல் மாதவிலக்கு தொடர்ந்தாலோ அல்லது இரண்டு -மூன்று மாதங்கள் கழித்து வந்தாலோ நிச்சயம் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவேண்டும்.
< மாதவிலக்கிற்கு முன்பு வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அதற்காக பயப்பட வேண்டாம். ஆனால் மாதவிலக்கு முடிந்த பிறகும் வெள்ளைப்படுதல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.