முகப்பு
மகளிர்மணி

தன்னம்பிக்கைக்கு  வயது தடையில்லை!

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற காலம்போய் தற்போது பெண்கள் கால் வைக்காத துறையே இல்லை. கல்வித் துறை, விளையாட்டு, சினிமா, அரசியல், தொழில் துறை என அனைத்துத்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற காலம்போய் தற்போது பெண்கள் கால் வைக்காத துறையே இல்லை. கல்வித் துறை, விளையாட்டு, சினிமா, அரசியல், தொழில் துறை என அனைத்துத் துறைகளிலும் பெண்களுடைய பங்களிப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஐ.டி. துறையில் இரவு, பகலாக பல பெண்கள் வேலை செய்கின்றனர். பல்வேறு சுயதொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அந்த வகையில், கோவை பீளமேடு பகுதியில் "மேக் மை கேக்ஸ்' எனும் கடையை நடத்தி வருகிறார் பி.காம் பட்டதாரியான நிர்மலா ராதாகிருஷ்ணன். அவர் கூறியதாவது:

"" 1986 - ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில்  பேக்கரி பயிற்சி 6 மாதம் படித்தேன். பின்னர், திருமணம், கணவர், குழந்தைகள் என மிகவும் பிஸியாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அதாவது என்னுடைய 47 - ஆவது வயதில் ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியபோதுதான் மேக் மை கேக்ஸ் எனும் பேக்கரியைத் தொடங்கினேன். தற்போது, எனக்கு கீழ் ஏழு பணியாளர்களை வைத்து வியாபாரம் செய்து வருவது மிகவும் பெருமையாக உள்ளது. எங்களது பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களின் தரத்திலும், சுவையிலும் எந்தக் குறையும் வரக் கூடாது என்பதில்  கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.