முகப்பு
மகளிர்மணி

 சமையல் டிப்ஸ்...

குருமாவில் தேவைக்கதிகமாகக் காரம் சேர்ந்துவிட்டால் ஒரு கப் தயிர் சேர்த்து லேசாகக் கொதிக்கவிடவும். காரம் குறைந்து விடும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:

<  குருமாவில் தேவைக்கதிகமாகக் காரம் சேர்ந்துவிட்டால் ஒரு கப் தயிர் சேர்த்து லேசாகக் கொதிக்கவிடவும். காரம் குறைந்து விடும்.

<  ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால்; ஆப்பம் மென்மையாக இருக்கும்.

<  சுவையான சப்பாத்தி செய்ய வேண்டும் என்றால் சம அளவு கோதுமை மாவையும், பார்லியையும் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

<  மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வென்னீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கீழே ஊற்றிவிட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

- கே.பிரபாவதி

<  காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

- மு.சுகாரா

<   கறுப்பு உளுந்தில் தோசைமாவைப் புளிக்க வைக்கும் பாக்டீரியா அதிகமாகவும் தோல் நீக்கிய வெள்ளை உளுந்தில்  குறைவாகவும் உள்ளது. இதனால் மாவு புளிப்பதில் வேறுபாடு ஏற்படுகிறது. எனவே தோலோடு கூடிய உளுந்தையே ஊற வைத்து தோல் நீக்கி பயன்படுத்தினால் இட்லி பூ மாதிரி  கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.