மகளிர்மணி

விக்ரம் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்! 

DIN

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் "துருவ நட்சத்திரம்.'  படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இப்படத்துக்கான கதாநாயகியாக அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகி விடவே, தற்போது ரீது வர்மா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ஜோமன் மாற்றப்பட்டு சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் மகன் ஆவார். இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் விக்ரமின் ஜோடி எனவும், ரீது வர்மா கதையின் முக்கிய வேடம் ஏற்கிறார் எனவும் படக்குழு தெரிவிக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT