மகளிர்மணி

இது புதுசு!

DIN

புடவை தான் தேர்வு!
டிரண்ட்டுக்கு ஏற்றாற் போல் தன் உடைகளை மாற்றிக் கொண்டாலும்  புடவையையே ஸ்ரீதேவி விரும்புகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 
"தென்னிந்தியப் பெண்களைப் போலவே எனக்கும் புடவைதான் மிகவும் பிடித்த உடை. கனமான பட்டுப் புடவை என்றாலும், கனமில்லாத ஷிபான் புடவை என்றாலும் அணிவதற்கு மிகவும் எளிதானது புடவைதான். நேர்த்தியாக உடையணிந்து அழகாக காட்சியளிப்பதைத்தான் என் கணவர் போனி கபூரும், மகள்களும் விரும்பு
கிறார்கள்'' என்கிறார் ஸ்ரீதேவி.

அதிக சம்பளம் பெறும் பிரியங்கா
உலக அளவில் தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை "ஃபோர்ப்ஸ்'  பத்திரிகை வெளியிட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் உலக அளவில் தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் பிரியங்காவுக்கு 8-ஆவது இடம்.  பிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான "குவான்டிகோ'வில் பிரியங்காவின் சம்பளம் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த சம்பளமே அவரைப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது. 

கனவு வீடு
அதிகமான ரசிகர்களைப் பெற்றுள்ள அதிதி ராவ், தன்னுடைய சொந்த வாழ்க்கையைக் குறித்து அதிகம் வெளியில் பேசாதவர். இந்நிலையில் பிரபல மரச்சாமான் நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் அதிதி வசிக்கும் வீடு காண்பிக்கப்பட்டது. மும்மையில் வெர்சோவா என்ற இடத்தில் அமைந்துள்ள அவரின் அடுக்குமாடி குடியிருப்பு, இளம்பெண்களின் கனவு வீடு போன்று உள்ளதாம். வீட்டின் "இன்டீரியர்' எளிமையாகவும், நேர்த்தியாகவும் அமைந்துள்ளதாம். இதிலிருந்து அதிதியியின் ரசனையை அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் வீட்டைப் பார்த்தவர்கள்.

விருந்தும் புகைப்படமும்
பிரபல ஆடை வடிமைப்பாளர்கள் மணிஷ் மல்கோத்ரா மற்றும் கரன் ஜோஹர் ஆகிய இருவரும் ஐஸ்வர்யா ராய் தம்பதியருக்கு விருந்து அளித்துள்ளனர். மணிஷ்  மல்கோத்ரா வீட்டில் நடைபெற்ற விருந்தில் இறுதியாக  வந்து அபிசேக் பச்சனும் இணைந்து கொண்டார். "எனது வீட்டில் எனது பிரியமானவர்களுடன்' என்ற தலைப்பில் மணிஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விருந்து புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

நீண்ட நாள் கனவு!
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 5-ஆவது முறையாக இந்தியாவின் அதிரடி வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றுள்ளார். 5 -0 என்ற செட்டில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ள மேரி கோமுக்கு 2015-ஆம் ஆண்டுக்குப் பின் கிடைக்கும் சர்வதேச அளவிலான தங்கப் பதக்கம் இதுதான். மேலும் 48 கிலோ பிரிவில் அவருக்கு கிடைத்துள்ள முதல் தங்கமும் இதுதானாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு மிகவும் பிடித்தமான 48 கிலோ பிரிவில் தங்கம் வென்றதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறாராம் மேரி கோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT