முகப்பு
மகளிர்மணி

இது புதுசு: போர்பஸ் ஆசியா பட்டியலில் அனுஷ்கா சர்மா!

ஆண்டுதோறும் "போர்பஸ் ஆசியா 30 வெளியிடும் 300 இளம் புதுமை மற்றும் திறமைசாலிகள் பட்டியலில் 10 பிரிவுகளில் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய முதல் 30 பேரில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

ஆண்டுதோறும் "போர்பஸ் ஆசியா 30 வெளியிடும் 300 இளம் புதுமை மற்றும் திறமைசாலிகள் பட்டியலில் 10 பிரிவுகளில் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய முதல் 30 பேரில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளார். 24 நாடுகளிலிருந்து ஆன்லைன் பரிந்துரைப்படி தேர்வு செய்யப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனுஷ்கா சர்மா. 2007-ஆம் ஆண்டு மாடலிங் துறை மூலம் அறிமுகமாகி, 2008- ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து "ராப் நே பனா தி ஜோடி' என்ற படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்ததோடு. க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமொன்றையும் நடத்தி வருகிறார்.

வெப் சீரியலில் அக்ஷரா ஹாசன்!

அமிதாப் பச்சன், தனுஷ், அஜீத் போன்ற பிரபலங்களுடன் நடிக்க அக்ஷரா ஹாசனின் பார்வை தற்போது பிரபலமாகி வரும் வெப் சீரியல்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஸ்ரீஜா ஜோஸ் இயக்கத்தில் உருவாகும் "குட்பை கேர்ள்' என்ற திரில்லர் வெப் சீரியலில் நடித்துவரும் அக்ஷார ஹாசன், "திரைப்படங்களை போலவே வெப் சீரியல்களிலும் கதையம்சம் இருந்தாலும் விறுவிறுப்பு அதிக மிருப்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன், டெல்லியிலும் பாங்காக்கிலும் நடைபெறும் இதன் படப்பிடிப்புக்காக கடினமான நடிப்புடன் சண்டை காட்சியிலும் நடிக்க பயிற்சி பெற்று வருகிறேன்' என்கிறார்.

பிரியாங்காவுக்கு பதில் கரீனா கபூர்!

இந்தியாவின் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராகேஷ் சர்மா பாத்திரத்தில் ஷாரூக்கானும் அவரது மனைவியாக பிரியங்கா சோப்ராவும் நடிக்க ஒப்பந்தமாயினர். "சல்யூட்' என்ற பெயரில் தயாராகும் இப்படத்தில் தற்போது பிரியங்காவுக்கு பதில் கரீனா கபூர் நடிக்கிறார். பிரியங்காவுக்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்ய ஆலோசனை நடத்தியபோது, பல மூத்த நடிகைகள் போட்டியிட கடைசியில் கரீனா கபூர் தேர்வு செய்யப்பட்டது, கரீனாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.

தமன்னாவுக்கு ஸ்ரீதேவி நினைவு விருது!

இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் தமன்னா பாட்டியாவின் திரையுலக சேவையை பாராட்டி, "ஜீ அப்சரா விருது' விழாவில் ஸ்ரீதேவி நினைவு விருது வழங்கப்பட்டது. 1983- ஆம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்து வெளியான "ஹிம்மத்வாலா' 2013 -ஆம் ஆண்டில் ரீமேக் செய்தபோது, ஸ்ரீதேவியின் பாத்திரத்தை தமன்னா ஏற்றிருந்தார். "நானும் ஸ்ரீதேவியை போலவே சிறுவயதிலேயே நடிக்க வந்தவள் என்பதால் கடந்த பத்தாண்டுகளில் இந்த திரையுலக மரபுகளை பற்றி தெரிந்து வைத்துள்ளேன்' என்கிறார் தமன்னா.

கங்கணா ரனாவத்திற்கு வாய்ப்பு!

காந்திஜியின் கொள்கைகளை உலக மக்களிடம் பரப்புவதற்காக வரும் ஆகஸ்ட் 13-19 தேதிகளில் அமெரிக்காவில் நியூஜெர்சியில் நடக்கவுள்ள காந்தி கோஸ் குளோபல் என்ற கருத்தரங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் மற்றும் நடிகையும், டாக்ஷோ பிரதிநிதியுமான ஒப்ரா வின்ப்ரே ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கருத்தரங்கில் இந்தியா சார்பில் பங்கேற்க பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னை பொருத்தவரை இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் சேவை செய்ய வேண்டுமென்று கருதுகிறேன். இது எனக்கு கிடைத்த அபூர்வமான வாய்ப்பாக நினைக்கிறேன். என்ன பேச வேண்டுமென்பது குறித்து மும்முரமாக குறிப்பெடுத்து வருகிறேன், என்கிறார் கங்கணா ரனாவத்.

முழு கட்டுரையைப் படிக்க →