முகப்பு
மகளிர்மணி

உடல் கட்டமைப்பு போட்டியில் ஹிஜாப் உடை..! 

பல் மருத்துவத்தில் நான்காம் ஆண்டு மாணவி மஜிஸியா பானு கேரளத்தைச் சேர்ந்தவர். திருமணமானவர். பளுதூக்கும் வீராங்கனை. தேசிய அளவில், ஆசிய அளவில் பதக்கங்களைப் பெற்றிருப்பவர்.

Updated On : 25 ஏப்ரல், 2018 at 12:16 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:21 PM

பல் மருத்துவத்தில் நான்காம் ஆண்டு மாணவி மஜிஸியா பானு கேரளத்தைச் சேர்ந்தவர். திருமணமானவர். பளுதூக்கும் வீராங்கனை. தேசிய அளவில், ஆசிய அளவில் பதக்கங்களைப் பெற்றிருப்பவர். பள்ளியில் படிக்கும் போது தடகள போட்டிகளில் பங்கு பெற்று பிறகு குத்துச்சண்டை பயின்று... பளுதூக்கும் வீராங்கனையானவர். சமீபத்தில் ஆஞஈவ 
ஆமஐகஈஐசஎ எனப்படும் உடல் கட்டமைப்பு போட்டியில் பெண்கள் பிரிவில் "மிஸ்டர் கேரளா'வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
மஜிஸியா பானு பளுதூக்கும் போட்டிகளிலும் சரி... உடல் கட்டமைப்பு போட்டியிலும் சரி... ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து கொண்டு கலந்து கொண்டார். பயிற்சியின் போதும் ஹிஜாப் அணிந்து கொள்ள மறப்பதில்லை. 
"என் இப்படி..' என்று கேட்டால், "இந்த போட்டிகளுக்கும் உடைக்கும் எந்த தொடர்பும் இல்லை. உடல் கட்டமைப்பு போட்டியில், இந்த மாதிரி ஹிஜாப் உடை அணிவதில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். எப்படி உடலைக் காண்பிக்க உரிமை இருக்கிறதோ, உடை அணிந்து மூடிக் கொள்ளவும் பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. உடல் கட்டமைப்பு போட்டியில் பரிசு கிடைத்தால் கிடைக்கட்டும். கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை' என்றுதான் ஹிஜாப் அணிந்து கலந்து கொண்டேன். ஆனால் போட்டியில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டது எதிர்பாராதது'' என்கிறார் மஜிஸியா பானு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.