மகளிர்மணி

சமையல்... சமையல்...: கேரட் பணியாரம்

கேரட்டை நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாகப் போட்டு துருவிய தேங்காயுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

எஸ்.பிரியம்வதா சென்னை.

தேவையானவை:

கேரட் - 100 கிராம்
பச்சரிசி மாவு - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கிண்ணம்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

கேரட்டை நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாகப் போட்டு துருவிய தேங்காயுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கேரட் விழுது ஏலத்தூள் இவற்றையும் சேர்க்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி அதையும் மாவில் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

அடுப்பை நிதானமாக எரியவிட்டு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், மாவை குழிக்கரண்டியால் எடுத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். அப்பம் உப்பிக் கொண்டு மேலே வரும்போது திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும். இதுவே கேரட் பணியாரம் சுவையான இந்த பணியாரத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT