* அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கினை வகிக்கிறது. மேலும், உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
* அதிமதுரம் மற்றும் சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மி.லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் காலை வேளையில் மூன்று நாட்கள் உண்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும், உதிரப் போக்கு நீங்கும்.
* அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் கலந்து இரவு, காலை வேளையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.