முகப்பு
மகளிர்மணி

ஓமம் மருத்துவ குணங்கள்!

சமையல் வகைகளுக்கு மணம், சுவையூட்டும் ஓமம், பல மருத்துவ குணங்கள் கொண்டது. இந்தியாவில் ஓமம் 2000 ஆண்டுகளாக இயற்கை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:12 PM
பகிர்:

சமையல் வகைகளுக்கு மணம், சுவையூட்டும் ஓமம், பல மருத்துவ குணங்கள் கொண்டது. இந்தியாவில் ஓமம் 2000 ஆண்டுகளாக இயற்கை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓமத்தில் புரதம், கொழுப்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் ஏ, பி முதலியன அடங்கியுள்ளன.
மருத்துவ குணங்கள்
* ஒரு மெல்லிய துணியில் கொஞ்சம் ஓமத்தை முடித்து, நுகர்ந்து வர சளித்தொல்லை குணமாகும். இது ஓர் இயற்கை இன்ஹேலர் ஆகும். ஓமத்திலுள்ள தைமால் என்ற வேதிப்பொருள், இருமலை ஏற்படுத்தும் தொற்று கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உடையது. இது இருமல், மூக்கடைப்பை நன்கு குணப்படுத்தும்.

* ஓமத்துடன் வெல்லம் வைத்து பொடித்து தின்றால் செரிமானக்கோளாறுகள் சீராகும். பசி ருசி ஏற்படும்.

* வாயுத் தொல்லையைப் போக்கும் தன்மையுடைது ஓமம். சிறிது ஓமத்தை மென்று தின்றால் நல்லபலன் கிடைக்கும்.

Advertisement

* ஓமம், சுக்கு, கருப்பட்டி சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர சாதாரண காய்ச்சல் குணமாகும்.

* சிறிது ஓமத்தை மென்று தின்று, ஒரு தம்ளர் சூடான வெந்நீர் குடித்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

* ஓமத் தண்ணீர் குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் என்னும் கடும் வயிற்று வலியைக் குணமாக்கும்.

* ஆரம்பநிலை ஆஸ்துமாவை ஓமம் குணமாக்கும் ஆற்றல் உள்ளது. மத்திமநிலை ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும்.

* ஓமத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வறுத்து பின்னர் மைய அரைத்து குழம்பு தயாரித்து சாதத்தில் ஊற்றி சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

* ஓமத்துடன் சின்ன வெங்காயம் வைத்து விழுதாக அரைத்து பற்றிட, ஒற்றைத் தலைவலி ஓடிவிடும்.
- உ.ராமநாதன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments