மகளிர்மணி

நெதர்லாந்து நாட்டில் நிருத்யோத்சவ் நடனவிழா

DIN

நெதர்லாந்து நாட்டில் வாழும் இந்தியர்கள் சார்பில் "நிருத்யோத்சவ்' என்ற நடனவிழா மிகச் சிறப்பாக டென் ஹாகில் கொண்டாடப்பட்டது. இங்கு வாழும் இந்திய குழந்தைகளிடையே நம் நாட்டின் பாரம்பரிய நடனங்கள் கற்றுத் தேர்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சார்ந்த மக்கள், ஏராளமான தமிழர்கள் உட்பட, சிறப்பாக பங்கேற்றனர். ஆடல் பாடல் நாட்டியம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக "லயா நடனப்பள்ளி' மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி அமைந்தது.
 கடந்த 4 ஆண்டுகளாக நெதர்லாந்தில் இந்த நடனப்பள்ளியை நடத்தி இங்கு வளரும் இந்திய பிள்ளைகளுக்கு நம் பாரம்பரிய நடனக் கலையை கற்றுத் தருகிறார் வைஜெயந்தி பஞ்சாபகேசன். இவர் பாரம்பரியம் மிக்க கலை குடும்ப வாரிசு ஆவார். இவரது தாத்தா வயலின் வித்வான் கலைமாமணி கிருஷ்ணமூர்த்தி, இவரது கொள்ளுப்பாட்டி திருவில்லிப்புத்தூர் கல்யாணி அம்மாள் ஆவார். இவரிடம் சீரிய பயிற்சி பெற்ற எனது மகள் ஐஸ்வர்யலட்சுமியும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பாக நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தது, எனக்கு ஒரு தாயாக மனநிறைவை தந்தது.
 - ஜெயந்தி பழனியப்பன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT