மகளிர்மணி

ஹை ஹீல்ஸ் அணிபவர்கள் கவனத்திற்கு!

தினமணி

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசெüகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.


 குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.
 மேலும், குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.
 இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பில் "நியுரோமா' எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.
 குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.
 குதிகால் செருப்பில் அழகும், ஆபத்தும் அதிகளவில் உள்ளன. எனவே அதிக நேரம் குதிகால் செருப்பு அணிந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
 - கவிதா பாலாஜி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT