மகளிர்மணி

இரட்டை குழந்தைகளுக்கு தாயான ஸாரே!

DIN

விளம்பர உலகில் "பாம்பே டையிங்'-கின் சிறந்த மாடலாக வலம் வந்தவர் லிஸாரே. பின்னர், ஹிந்திப் படங்களிலும் தோன்றியவர். சில ஆண்டுகளுக்கு முன் அவர், ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் தாய்மை அடைவதன் மூலம் சில பிரச்னைகள் ஏற்படலாமென்று மருத்துவர்கள் கூறியதால், தன் கணவர் ஜேசன் டேனியுடன் சேர்ந்து குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். ஆனால் தங்களிருவரின் ரத்த சம்பந்தத்துடன் குழந்தை பெற விரும்பிய லிஸாரே, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பினார்.
 இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு ஏகப்பட்ட சட்ட பிரச்னைகள் இருப்பதால், வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதை அங்கீகரிக்கும் ஜியார்ஜியா நாட்டில் குடியேறினார். அங்கு கடந்த ஜூன் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். லிஸாரேவும் ஜேசனும் சேர்ந்து குழந்தைகளுக்கு சுஃபி என்றும் úஸாலியல் என்றும் பெயரிட்டுள்ளனர்.
 நான் நோயில் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஏராளமானவர்களிடமிருந்து நிபந்தனையற்ற ஆதரவு கிடைத்தது. இது எனக்கு நோயை எதிர்க்கும் மன வலிமையை அளித்தது. இப்போது என் வாழ்க்கையில் மலர்ந்துள்ள மகிழ்ச்சியை அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார் லிசாரே.
 - அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT