மகளிர்மணி

இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-27

DIN

"இதுவரை நீங்கள் பிசினஸ் எதுவும் செய்ய வில்லையா? பரவாயில்லை, இதோ உங்களுக்காக ஒரு ஐடியா, தற்போது தீபாவளி நேரம் நெருங்கி வருவதால், தீபாவளி பலகாரங்கள் செய்வதற்கான ரெடிமிக்ஸ்களை தயாரித்து விற்பனை செய்யலாம். நல்ல வரவேற்பு கிடைக்கும்'' என்கிறார் சுய தொழில் ஆலோசகர் உமாராஜ்:
 ரெடிமேட் அதிரச மாவு: அதிரசத்திற்கு பாகு நன்றாக எடுக்க வருபவர்கள், ரெடிமேட் அதிரச மாவு தயார் செய்து விற்பனை செய்யலாம். வேண்டியவர்கள் அந்த மாவை வாங்கி அதிரசம் செய்து கொள்வார்கள். இந்த மாவு 3 மாதம் வரை கெட்டுப் போகாது. இதனால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
 குலாப் ஜாமூன் மிக்ஸ்: இதற்கு பால் பவுடர் 500 கிராம் , ரவை 150 கிராம், மைதா250 கிராம், உப்பு 1 சிட்டிகை, சமையல் சோடா 15 கிராம் தேவை. முதலில் நன்றாக அரைத்த ரவையுடன் மற்ற பொருள்களைச் சேர்த்து கலந்தால் குலாப் ஜாமூன் மிக்ஸ் தயார். இதனை பேக் செய்து விற்பனை செய்யலாம்.
 முறுக்கு மாவு மிக்ஸ்: இதற்கு பச்சரிசி 3 கிண்ணம், புழுங்கல் அரிசி 1 கிண்ணம், உளுந்து 1 கிண்ணம் தேவை. பச்சரிசியை ஊற வைத்து பின் வடிகட்டி காயவிட்டு மிஷினில் அரைத்து கொள்ளவும். புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். உளுந்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் இவற்றையும் மிஷினில் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்னர், அனைத்து மாவையும் சலித்து ஆறவிட்டு ஒன்றாக கலந்து பேக் செய்யவும். இதில் அவரவர் தேவைக்கேற்றவாறு எள், வெண்ணெய் சேர்த்து தயார் செய்து கொள்ளலாம்.
 இது போன்ற ரெடிமிக்ஸ் பவுடர், மசாலா பொடி , மூலிகை மசாலா பொடிகள் தயாரிப்புகள் எங்கள் பயிற்சி மையங்களில் அவ்வப்போது நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
 - ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT