மகளிர்மணி

கார்த்திகை டிப்ஸ்

தினமணி

• கார்த்திகை பொரி செய்யும்போது வெல்லப்பாகை தண்ணியாக இருக்கும்போதே வடிகட்டி பிறகு பாகாக்கினால் மண் நெருடாது.
• கார்த்திகை பொரியில் தேங்காயை சிறிது சிறிதாக வெட்டி வெல்லப் பாகில் சேர்ப்பதோடு முந்திரியையும் துருவி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
• கார்த்திகை அப்பம் செய்யும்போது சிலருக்கு அப்பம் சரியாக வராது. அதற்கு, அப்ப மாவை கரைக்கும்போது வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து தேவையான வெல்லநீரை கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீராலேயே கரைத்து எண்ணெய்யில் ஊற்றினால் அப்பம் மிருதுவாக வரும்.
• கார்த்திகை அதிரசம் செய்யும்போது பூப்போல வர மாவு நைசாக இருக்க வேண்டும். எண்ணெய்யை மிதமான சூட்டில் வைத்து செய்தால் கறுக்காது.
• கார்த்திகை அதிரசத்தில் பேரீச்சம் பழ விழுது, வாழைப்பழ விழுது சேர்த்து செய்தால் சுவையே தனிதான்.
• கார்த்திகை நெற்பொரி, சோளப்பொரி இரண்டையும் வாங்கியவுடன் ஓர் அகலமான தாம்பாளத்தில் போட்டு மேலாக கையால் புடைத்து எடுத்தால் பெரிய பொரி மட்டும் வரும். கருகியது, தூசி, மண் எல்லாம் அடியில் தங்கிவிடும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT