மகளிர்மணி

ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல !

DIN

"தினமணி' நாளிதழின் இணைப்பான "மகளிர் மணி'யின் சார்பில் 1950-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனி முத்திரை பதித்த 9 திரையுலகத் தாரகைகளுக்கு தற்போது பாராட்டு விழா நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு 1960-ஆம் ஆண்டு முதல் முதல் 1980-ஆம் ஆண்டு வரையிலும், அதற்கு அடுத்த ஆண்டு 1970-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரையிலும் என 20 ஆண்டு கால கட்டத்தில் தடம்பதித்த தாரகையர் பாராட்டப்பட இருக்கிறார்கள்.
 ஆண்கள் முன்னால் பெண்கள் நிற்பதே தவறு என்று விலக்கி ஒதுக்கப்பட்டிருந்த காலத்தில், ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று தடையை உடைத்தெறிந்து ஆடவர்களே அதிசயிக்கும் விதத்தில், அசாத்திய சாதனைகள் புரிந்த அந்த மகளிருக்கு ரசிகர்கள் சார்பிலும் "தினமணி'யின் சார்பிலும் திரையுலகின் சார்பிலும் இந்த நேரத்தில் முதல் வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
 அதுபோன்று இந்த தருணத்தில், தமிழ்த்திரையுலகில் கால் நூற்றாண்டு காலம் தங்கத் தாரகையாக கோலோச்சி, அடுத்த 35 ஆண்டு காலம் அரசியலில் தனிப்பெரும் ஆளுமையாக வலம் வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரைப் பற்றி நினைவு கூறாமல் இருக்க முடியாது. அவருடன் திரையுலகில் இணைந்து நடித்து நெருங்கிப் பழகிய 9 நட்சத்திர சாதனை மகளிருக்கு இங்கே விருது வழங்கி பாராட்டு விழா நடத்தும்போது, அவர் தலைமையேற்கவில்லையே என்கிற குறை, விருது பெறும் 9 சாதனை நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் இருக்கும்.''
 (தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியதிலிருந்து ஒரு பகுதி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT