முகப்பு
மகளிர்மணி

ஃபோர்ப்ஸ் பட்டியலில்  5 இந்தியப் பெண்கள்

முப்பது வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினரில் தங்கள் துறையில் மாற்றம் கொண்டுவந்திருக்கும் முப்பது நட்சத்திரங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது, பிரபல வணிக இதழான "ஃபோர்ப்ஸ்'.

Updated On : 26 ஜூன், 2020 at 3:13 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:00 PM

முப்பது வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினரில் தங்கள் துறையில் மாற்றம் கொண்டுவந்திருக்கும் முப்பது நட்சத்திரங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது, பிரபல வணிக இதழான "ஃபோர்ப்ஸ்'.

சமீபத்தில் 2020 ஆண்டிற்கான "ஃபோர்ப்ஸ்' பட்டியலில் இந்திய பெண்கள் 5 பேர் இடம் பிடித்திருக்கின்றனர். ஐந்து பெண்மணிகளில் ஒருவர் சாய் பல்லவி. நடிகைகளில் சாய் பல்லவி மட்டுமே "ஃபோர்ப்ஸ்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இதர நான்கு பேர்கள் ஆகான்ஷா டியோ சர்மா, பாலக் ஷா, பிரியா பிரகாஷ், சாய் கோல்.

சாய் பல்லவி தென்னக படங்களில் நடிப்பதினாலும், மலையாளத்தின் "பிரேமம்', தெலுங்கின் "ஃபிதா' படங்களில் சிறப்பாக நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளதினாலும் "ஃபோர்ப்ஸ்' பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இவருக்கு வயது 27 . பிரேக் டான்சில் பின்னி பெடலெடுக்கும் சாய் பல்லவியின் "ரவுடி பேபி' பாடல் எல்லா தென்னக மொழியிலும் ஹிட் பாடலாக மாறியுள்ளது. படங்களில் நாயகியாக அதுவும் வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க மட்டுமே முனைப்பு காட்டி வருவதால் சாய் பட்டியலில் இடம் பிடிக்க உபரி காரணங்களாம்.

Advertisement

அகான்ஷா டியோ சர்மா. வயது 28 . டிசைன் உலகில் பிரபலமாகி வருபவர். பன்னாட்டு நிறுவனமான "ஐஓஉஅ' வில் பணி புரியும் ஒரே இந்திய டிசைனர். கலையில் பன்முகம் கொண்டவர். நடிப்பதுடன், குறும்படங்களையும் தயாரிப்பவர்.

பாலக் ஷா. கைத்தறி சேலைகளுக்கு புதுமையான வேலைப்பாடுகளுடன் உற்பத்தி செய்யும் "ஏகயா' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. ஃபெர்ரகமோ, மிஸ்úஸானி போன்ற நிறுவனங்களுடன் வர்த்தக உறவை வைத்திருப்பவர். கைத்தறி சேலைகளை சர்வதேச அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று உழைப்பவர், 28 வயதாகும் பாலக்குடன், 8000 கைத்தறி நெசவாளர்கள் இணைந்து சேலைகளுக்கு புது வடிவம் வார்க்கிறார்கள்.

பிரியா பிரகாஷ். "ஹெல்த் செட் கோ' நிறுவனத் தலைவி. குழந்தைப் பருவத்தில் பருமனாக இருந்ததால் சக தோழிகள் தோழர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானவர். பள்ளிகளில் உடல் நலம் பேணல், கல்வி, மருத்துவ அறிவு, குழந்தைகள் காப்பீடு போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு முகாம்களையோ எழுபது நகரங்களில் நடத்தி வருபவர். இவருக்கும் வயது 28 தான்.

சாய் கோல் . வயது 26 . பாரத் அக்ரி அமைப்பை நடத்தி வருபவர். விவசாயிகள் தங்கள் உற்பத்தியை பெருக்க உத்திகளை இந்த நிறுவனம் சொல்லித் தருகிறது. சென்னை ஐ.ஐ. டியில் படித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.