முகப்பு
மகளிர்மணி

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வென்ற பெண் பிரதமர்கள்!

உலகில் பல நாடுகள் இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சில நாடுகளில் இருக்கும் பெண் பிரதமர்கள் தங்களுடைய ஆட்சியின் சிறந்த செயல்பாட்டால் அந்தத் தொற்றை அதிகமாக நாட்டிற்குள் விடுவதில்லை என்ற

Updated On : 30 ஏப்ரல், 2020 at 7:43 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:04 PM


உலகில் பல நாடுகள் இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சில நாடுகளில் இருக்கும் பெண் பிரதமர்கள் தங்களுடைய ஆட்சியின் சிறந்த செயல்பாட்டால் அந்தத் தொற்றை அதிகமாக நாட்டிற்குள் விடுவதில்லை என்ற மந்திரத்தை மட்டும் தங்களுடைய குறிக்கோளாக வைத்துள்ளனர். அதில் முக்கியமானவர்களில் சிலர்.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்

இவர் 2017-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் 40-ஆவது பிரதமராக பதவியேற்றவர். பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்றேடுத்த உலகின் இரண்டாவது பிரதமர் என்ற பெயரைப் பெற்றவர். இதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமராக மறைந்த பெனாசீர் பூட்டோவுக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார தாக்கங்கள் காரணமாக நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவரது அரசாங்க அமைச்சர்கள் 20சதவீத ஊதியங்களை நாட்டிற்காக வழங்கியுள்ளனர். எந்த நிலையிலும் நாட்டின் ஒட்டுமொத்த நிதி நிலையைப் பாதிக்காது என்பதில் நம்பிக்கையுடன் செயல்படுகிறார். வைரûஸ வெளியேற்றுவதற்காக நியூசிலாந்து நாட்டில் வாழும் மக்களை அண்மையில் அவர் பாராட்டியும் உள்ளார். அதைவிட அரசு ஊழியர்களுக்கு ஊதியக் குறைப்பு 6மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

இது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசு அமைப்புகளின் தலைமை நிர்வாகிகளுக்கு பொருந்தும். மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் போன்ற எந்த முன்னணி ஊழியர்களுக்கும் இது பொருந்தாது. இதைப்போல் பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அந்நாட்டில் கரோனா தொற்று என்பது மிகவும் குறைவு.

நார்வே பிரதமர்-எர்னா சோல்பெர்க்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த ஜனவரி மாதத்தில் அந்த நாட்டு மக்களுக்கு நாட்டின் பிரதமர் எர்னா சோல்பெர்க் ஒரு செய்தியை வெளியிட்டார் அதில் நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தான். பொதுவாக நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்பட்ட சுவீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவாக உள்ளது. அதை அதிகரிக்கச் செய்யவே இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

ஆனால் இந்தியாவும், நார்வேயும் கூட்டு முயற்சியால் தாய், சேய் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. பிப்ரவரி மாதம் 26- ஆம் தேதி நார்வே நாட்டில் முதன் முறையாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தொற்றை உடனடியாக கண்டறியும், வகையில் நாடு முழுவதும் 20 பரிசோதனை மையங்களை உருவாக்கியது. அத்துடன் மார்ச் மாதம் 12-ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. நோய் அறிகுறி தென்பட்ட நிலையிலேயே அவர்களை கண்டறிந்து சமூக பரவலை எளிதாக கட்டுப்படுத்தின. அதைவிட தொலைக்காட்சி வாயிலாக பெரியவர்கள் எவரும் இல்லாமல் சிறுவர், சிறுமியரை வைத்து கரோனா பற்றிய விழிப்புணர்வுக்கு பொறுமையாக பதில் அளித்துள்ளார். தைரியத்தை ஊட்டினார். இதனால் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மக்களையும் வைத்திருக்கிறார், கரோனாவையும் வைத்திருக்கிறார்.

ஜெர்மனி பிரதமர் - ஏஞ்சலா மெர்கெல்

ஜரோப்பியாவில் கரோனா உள்ளே நுழைந்தவுடனே ஜெர்மனியில் ஊரடங்கு உத்தரவை அமலுக்குக் கொண்டு வந்தார் ஏஞ்சலா மெர்கெல். மக்கள் சமூக இடைவெளியை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். இப்போது நோய்த்தொற்று பரவலை பெருமளவில் தடுத்து நிறுத்தி இருக்கிறார். காரணம் பொது மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி இருப்பதால் சாதித்திருக்கிறார். அதற்காக வித்தியாசமான முறையை கையாண்டதுதான்.

அவை கரோனா டாக்சியில் மருத்துவர் பாதுகாப்பான உடைகளை அணிந்து கொண்டு ஜெர்மனியின் நகரங்களிலும், தெருக்களிலும் உலா வந்து நோய்த் தொற்று பாதித்தவர்களின் வீட்டுக்குச் சென்று நேரடியாக பரிசோதித்து வருகின்றனர். இப்போது சில பள்ளிக்கூடங்கள் இயங்க தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்நாட்டு மக்கள் இவரை தினந்தோறும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.