மகளிர்மணி

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தை பளபளப்பாக்க 

தக்காளி சாறு அரை தேக்கரண்டி, தேன் அரை தேக்கரண்டி சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்து பகுதியைச் சுற்றி பூசி வர கருமை சிறிது நாளில்  மறைந்துவிடும்.

மேரி ரஞ்சிதம்.

தக்காளி சாறு அரை தேக்கரண்டி, தேன் அரை தேக்கரண்டி சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்து பகுதியைச் சுற்றி பூசி வர கருமை சிறிது நாளில்  மறைந்துவிடும்.

ஆப்பிளைத் துருவி, சிறிது தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் போய்விடும்.

முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

பாதாம் பொடியை விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த விழுதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் பருக்கள் இருந்தால்  சீக்கிரம் போய்விடும்.

முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி, பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.

பாலை காய்ச்சும்போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

உருளைக்கிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

3 ஆப்பிள் துண்டுகள், 3 கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதைப் போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT