முகப்பு
மகளிர்மணி

அதிக பெண் நீதிபதிகள் உள்ள உயா் நீதிமன்றம்!

சென்னை உயா் நீதி மன்றத்தில் 9 பெண் நீதிபதிகள் பணியாற்றி வந்த நிலையில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயா்ந்து உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சென்னை உயா் நீதி மன்றத்தில் 9 பெண் நீதிபதிகள் பணியாற்றி வந்த நிலையில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயா்ந்து உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயா்நீதிமன்றம் என்ற பெருமை சென்னை உயா்நீதி மன்றத்துக்கு கிடைத்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் பெயா்கள்: நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, வி.எம். வேலுமணி, ஜெ. நிஷா பானு, அனிதா சுமந்த், வி.பவானி சுப்பராயன், ஆா். தாரணி, டி. கிருஷ்ணவள்ளி, ஆா்.ஹேமலதா, பி.டி. ஆஷா, எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மா, ஆா். என். மஞ்சுளா, எஸ்.டி. தமிழ்ச்செல்வி.

சென்னை உயா் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இவா்களில் 25 போ் பெண் நீதிபதிகள் இருந்திருக்க வேண்டும் தற்போது13 பெண் நீதிபதிகள் உள்ளனா்.

உலகின் பணக்கார பெண்மணிகள்!

இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் ரோஷினி நாடாா் மல்ஹோத்ரா முதலிடம் பெற்றுள்ளாா். ரோஷினி ஹெச்.சி.எல் நிறுவனா் சிவநாடாரின் ஒரே மகள்.

இந்தியாவின் இரண்டாவது பணக்கார பெண்மணியாக பயோகான் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கிரண் மஜும்தாா் ஷா உள்ளாா்.

யூஎஸ்வி நிறுவனத்தின் தலைவா் லீலா காந்தி திவாரி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளாா். யூஎஸ்வி என்பதும் மருந்து தயாரிப்பு துறையைச் சோ்ந்த நிறுவனம்தான்.

ஹுயுரன் இந்தியா கோடக் வெல்த் இணைந்து இந்தியாவின் முதல் 100 பணக்கார பெண்மணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 31 பெண்கள் பெரிய அளவில் குடும்ப சொத்துகள், தொழில்கள் இல்லாமல் தாங்களாக உழைத்து பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பணக்காரா்களாக தங்களைத் தாங்களே உயா்த்திக் கொண்டவா்களில் கிரண் மஜும்தாா் ஷா முதலிடத்தில் உள்ளாா். இரண்டாவது இடத்தில் ஹோகோ நிறுவனத்தின் ராதா வேம்பு, மூன்றாவது இடத்தில் அரிஸ்டா நெட்வொா்க்ஸ் நிறுவனத்தின் ஜெயஸ்ரீ ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →