மகளிர்மணி

அழகுக்கு அழகு! கூந்தல் பராமரிப்பு

இன்றைய மணப்பெண்களை பொருத்தவரை கூந்தல் மற்றும் ஆடை அலங்காரத்திற்கே அதிக முன்னுரிமை தருகிறார்கள்.

DIN

தலை முடிக்கு தனியான அக்கறை அவசியம்!
இந்த வாரம் கூந்தல் பராமரிப்பு முறைகளைப் பற்றி விரிவாக பேசுகிறார் "நேச்சுரல்ஸ்' இயக்குநர் வீணா குமாரவேல்: 
புறத்தோற்றத்தை சிறப்பாய் காட்டுவதில் முதன்மை வகிப்பது தலைமுடிதான். அதனால்தான், வாழ்க்கையில் எதை இழந்தும் கவலைப்படாத பலர், தலைமுடி உதிர்வதற்கு வாழ்க்கையே தொலைந்தது போல் வருத்தப்படுவார்கள். உடலின் உச்சியில் இருக்கும் அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமுடி பராமரிப்பின் முக்கிய அம்சங்கள் என்ன பார்க்கலாம் வாருங்கள்...
இன்றைய மணப்பெண்களை பொருத்தவரை கூந்தல் மற்றும் ஆடை அலங்காரத்திற்கே அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதுதான் இன்றைய மணப்பெண் அலங்கார டிரெண்ட்டாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அழகான நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் இல்லை. கேசத்தைப் பற்றி கவலைப்படாத ஆண்களும் இருக்க முடியாது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் நீண்ட கூந்தல் வளர்ப்பது இயலாத காரியமாக உள்ளது. உண்மையில் தலைமுடி அழகிற்கான படைப்பு அல்ல. உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தி தலைக்கு பாதுகாப்பை அளிப்பதே கூந்தலின் பணி.
கூந்தலை பொருத்தவரை உதிரும் பிரச்னை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன, குழந்தை முதல் வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏராளம்.
கூந்தலை பராமரிப்பது எப்படி?
இன்றைய பெண்களுக்கு கூந்தலில் கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடு. அதாவது ஆரோக்கியம் இல்லாத உணவு, மன அழுத்தம், அடிக்கடி கோபப்படுதல், படபடப்பு போன்றவை முக்கிய காரணங்களாகும், மேலும் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் டை மற்றும் தரம் குறைந்த ஷாம்புகள் கூந்தல் வளர்ச்சியை தடுக்கிறது. 
அடுத்ததாக கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது நம் அன்றாடம் குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர், வெயில், சுற்றுப்புற சூழல் மற்றும் சுற்றுசூழல் மாசு. அடுத்தாக கூந்தலை மிக முக்கிய பிரச்னையில் ஒன்று பொடுகு. பொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை சிகிச்சை எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுகுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூகள் இருக்கின்றன. மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். 
பொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் துவைத்து அல்லது புதிதாக உபயோகப்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். 
உணவுகள் என்ன?
எண்ணெய் பிசுக்கான கூந்தல் கொண்டவர்கள் கொழுப்புச் சத்துள்ள பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். 
குறிப்பாக பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 
வறண்ட கூந்தல் உள்ளவர்கள் உணவில் சற்றே அதிக அளவில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். 
பச்சைக் காய்கறி மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவற்றில் இருக்கும் இரும்பு மற்றும் செம்பு போன்ற தாதுக்களும் கூந்தலுக்கு நல்லது. 


யோசனைகள் 
• அதிகம் முடி கொட்டுவதைத் தடுக்க ஹேர்பேக் செய்ய வேண்டும். அதனை தற்போது அனைத்து பார்லர்களிலும் செய்கிறார்கள். தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் "கண்டிஷனர்' உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது.
• கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் அலசுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளபாகவும் இருக்கும்.
• உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கிய பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு முலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பை பயன்படுத்துவது நல்லது.
• மார்க்கெட்டில் கிடைக்கும் பிராண்டட் ஹேர் பிரஷ்களை பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.
• சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. 
• குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிபாகத்தைவிட வேர்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும்.
• ஹேர் ட்ரையரை பயன்படுத்தும்போது கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.
• நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலைமுடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் முடி இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம்.
- வனராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT