முகப்பு
மகளிர்மணி

ஆல்யா மானஷாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும்  "ராஜா ராணி'  தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புள்ளது.

Updated On : 16 ஜனவரி, 2020 at 10:25 AM
பகிர்:

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும்  "ராஜா ராணி'  தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புள்ளது. இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்களில் சஞ்சீவ், ஆல்யா மானஷாவும் அடங்குவர்.  இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள்,  நிஜத்திலும் காதலர்களாகி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

தற்போது,  ஆல்யா மானஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆல்யா மானஷாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர, சஞ்சீவுக்கு ரசிகர்களின்  வாழ்த்து குவிந்துவிட்டதாம். இதனால், "இந்த நாளை என்றும் மறக்கமாட்டேன்' என்று கூறியிருக்கும் சஞ்சீவ், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.