மகளிர்மணி

மடல்கள்!

DIN

தினமணி மகளிர்மணி 01.01.2020 இதழில் "விரைவில் அரசியலுக்கு வருவேன்' என்ற நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக மட்டுமல்லாமல், கிராமப்புற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கும் ஆராய்ச்சி முகாம்களை செய்து வருவது போற்றத்தகுந்தது. அவரின் சமூகசேவை நோக்கம் உன்னதமானது.

எஸ்.ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

விளையாட்டாக ஆன் லைனில் தேர்வு எழுதி, நாசா செல்லும் ஆதனக் கோட்டை அரசுப் பள்ளி மாணவி முயற்சி திருவினையாக்கும் என நிரூபித்துள்ளார். அவரது தன்னம்பிக்கையை பாராட்டுவோம். அதுபோன்று "துணிவே துணை' கட்டுரை படித்தேன். ஒருதலைக் காதலால் அமிலம் வீசுவது, மார்பிங் மூலம் இணையத்தில் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுவது, கொல்வது என இன்றைய இளம் பெண்கள் சந்திக்கும் பேராபத்தான கொடுமைகளால் ரேஷ்மா குரேஷி போன்றவர்கள் இனியும் உருவாகாமல் இருக்க அரசு தக்க நடவிடிக்கைகள் எடுத்து தடுக்க வேண்டும்.

அ.யாழினி பர்வதம், சென்னை.

"மகளிர் இதழ்கள்' பற்றிய வரலாற்றைப் படித்தபோது, நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. மகளிர் முன்னேற்றத்திற்காக எத்தனை சுவையான இதழ்கள் அந்தக்காலத்தில் இருந்துள்ளது. காலங்களை வென்று பல இதழ்கள் மகளிரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளது என்று நினைக்கும்போது மகிழ்வளிக்கிறது.

எம்.ரஜியாபேகம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT